இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த மூன்று பருவகாலங்களாக செயற்பட்டுவந்த சந்திரகாந்த் பண்டித் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அபிஷேக் நாயர் பயிற்றுவிப்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
>>MI எமிரேட்ஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் பூரன் இணைப்பு
சந்திரகாந்த் பண்டித்தின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய மூன்று பருவகாலங்களில் கடந்த 2024ஆம் ஆண்டு சம்பியனாகவும் முடிசூடியுள்ளது.
அபிஷேக் நாயர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இணைந்து செயற்பட்டுவந்தார். இவர் இந்த ஆண்டு மாத்திரமே அந்த அணியுடன் இணைந்திருக்கவில்லை.
அதேநேரம் இந்திய அணியின் முன்னணி வீரர்களின் தனிப்பட்ட பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுவந்துள்ளார். இவர் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராஹுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் நாயர் ஆலோசகர் டுவைன் பிராவோ உட்பட ஏற்கனவே இணைந்து பணிபுரிந்த பல பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து இவர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















