இந்திய T2I0 தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

Sri Lanka Women’s Tour of India 2025

67

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அத்தபத்து செயற்படவுள்ளதுடன்உதவி தலைவியாக ஹர்ஷிதா சமரவிக்ரம பெயரிப்பட்டுள்ளார். 

டிசம்பர் 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ஐந்து T20I சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் கிரிக்கெட்டில் வலிமையான அணிகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது இலங்கை மகளிர் அணிக்கு மிகவும் பயனுள்ள அனுபவமாக அமையும்.

இதனிடையேஇலங்கை மகளிர் அணி டிசம்பர் 17ஆம் திகதி இந்தியா புறப்பட உள்ளது. 

T20I தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் விபரம்: 

சமரி அத்தபத்து (அணித் தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம (உதவி தலைவி), ஹசினி பெரேராநிலக்ஷிகா டி சில்வாகவிஷா தில்ஹாரிஇமேஷா துலானிகௌஷினி நுத்யங்கனாமல்ஷா ஷெஹானிஇனோகா ரணவீரஷஷினி கிம்ஹானிநிமேஷா மதுஷானிகவ்யா காவிந்திரஷ்மிகா செவ்வந்திமல்கி மதாரா 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<