பக்ஹர் ஷமானுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Sri Lanka tour of Pakistan 2025

8
Sri Lanka tour of Pakistan 2025

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமானுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அவருடைய போட்டிக்கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு யிலான முத்தரப்பு T20I தொடரின் இறுதிப்போட்டியின் போது நடுவரின் தீர்ப்புக்கு முரண்பட்ட காரணத்துக்காக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

“Rebuild Sri Lanka” திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் 300 மில்லியன் ரூபாய்   நன்கொடை!<<

குறித்த இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் தசுன் ஷானகவின் பிடியெடுப்பொன்றை பக்ஹர் ஷமான் நிகழ்த்தியிருந்தார். எனினும் குறித்த பிடியெடுப்பு முறையற்றது என மூன்றாவது நடுவர் ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்திருந்தார்.

இதனால் பக்ஹர் ஷமான் மற்றும் பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் நடுவரின் தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், நடுவருடன் முரண்பட்டனர்.

அத்துடன் இதற்கு அடுத்த பந்தில் ஷானக போல்ட் முறையில் ஆட்டமிழந்த பின்னர், கள நடுவரிடம் சென்று ஆட்டமிழப்பு கோரி நடுவரை அவமதிக்கும் வகையில் செயற்பட்டனர்.

எனவே பக்ஹர் ஷமானின் போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், அவருக்கு ஒரு குற்றப்புள்ளியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<