இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜஸ்ப்ரிட் பும்ராவின் முதுகுப்பகுதியில் உள்ள உபாதை அச்சம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
>>செப்டம்பரில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய U19 மகளிர் கிரிக்கெட் அணி<<
எனினும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக ஜஸ்ப்ரிட் பும்ரா உட்பட அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் தயார்நிலையில் இருப்பதாக அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி பும்ராவின் எதிர்கால கிரிக்கெட்டை கருத்திற்கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜஸ்ப்ரிட் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட், மூன்றாம் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், இதில் இரண்டு தோல்விகளையும், நான்காவது போட்டியை சமனிலையாகவும் இந்திய அணி முடித்திருந்தது.
இந்த நிலையில் பும்ரா அணியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் ஆகாஸ் தீப் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<