விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 49ஆவது தேசிய பெரும் விளையாட்டு விழா தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறையை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் (17) ஆரம்பமாகியது.
இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கடைசி அங்கமான மெய்வல்லுனர் நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 29 முதல் 31 ஆம் திகதி வரை காலி தடல்ல விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழா போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை மூன்று இடங்களில் மாத்திரம் நடத்தப்படுவது சிறப்பம்சமாகும். இதன்படி, காலி தடல்ல விளையாட்டுத் தொகுதி, ஹிக்கடுவ நகர சபை விளையாட்டு மைதானம், மாத்தறை கொட்டவில உள்ளக விளையாட்டு அரங்கம் மற்றும் கொழும்பில் உள்ள சில இடங்களில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் 33 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் நகர்வல ஓட்டப் போட்டி மாத்திரம் நிறைவடைந்துள்ளது.
இதனிடையே, ஐந்து கட்டங்களின் கீழ் நடைபெறும் போட்டிகளின் முதல் கட்டம் நேற்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. அதில் ஏழு போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இரண்டாம் கட்டம் இம்மாதம் 25 முதல் 28 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், இதில் மல்யுத்தம், வூசூ, தைக்வாண்டோ, பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், நீச்சல், ஜூடோ, றக்பி செவன்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், கிரிக்கெட், பெட்மிண்டன் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள ஒருசில விளையாட்டு அரங்குகளில் நடைபெறும்.
- பொதுநலவாய உயிர்காப்பு சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு முதல் தங்கம்
- ஜப்பானில் நடைபெற்ற பவர்லிப்டிங் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற புசாந்தன்!
- ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களை அடைந்த முதல் இலங்கையரானார் யோஹான் பீரிஸ்
நான்காம் கட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 17 ஆம் திகதி வரை சதுரங்கம், கரப்பந்தாட்டம், கெரம், வலைப்பந்தாட்டம், கராத்தே, கடற்கரை கபடி போட்டிகள் நடைபெறும். மேலும், ஐந்தாம் கட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 15 முதல் 31 ஆம் திகதி வரை கூடைப்பந்து, குத்துச்சண்டை, உடல் கட்டழகர், கால்பந்து, கபடி, கடற்கரை கரப்பந்தாட்டம் காலி மாவட்டத்தை மையமாக வைத்து நடைபெறும். ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலி தடல்ல விளையாட்டு மைதானத்தில் இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஆகஸ்ட் 31ஆம் திகதி 49ஆவது தேசிய விளையாட்டு விழா நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி இன்று (19) காலை ஹிக்கடுவ நகரில் நடைபெற்றது. இதற்காக, ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 10 வீரர்களும், தலா ஆறு வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஆண், பெண் இருபாலாருக்குமான சைக்கிளோட்டப் போட்டியும் இன்று ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இம்முறை சைக்கிளோட்டப் போட்டியில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முறையே 90 வீரர்களும், 56 வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஆண், பெண் இருபாலாருக்குமான வேகநடைப் போட்டி நாளை (20) ஹிக்கடுவையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விளையாட்டு விழாவில் ஒரு மாற்றம் என்னவென்றால், இதுவரை நடைபெற்ற வழக்கமான ஆண், பெண் இருபாலாருக்குமான ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டப் போட்டி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேசிய விளையாட்டு விழா ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 1,00,000 ரூபா வீதமும், மாகாண மட்டப் போட்டி ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5,00,000 ரூபா வீதமும் வழங்கப்படும். அதேபோல, தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
INSERT 1.2 IMAGES AS SLIDER
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்ரகயில், ‘அரசின் விளையாட்டு கொள்கையின்படி ‘துடிப்பான குடிமகன் வெற்றி பெறும் மக்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை தேசிய விளையாட்டு விழா மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந் நாட்டு மக்களை விளையாட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து சைக்கிள் பேரணி ஒன்றையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன’ என அமைச்சர் தெரிவித்தார்.
அந்த சைக்கிள் பேரணி இம்மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அருகிலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின் அதிகபட்ச தூரம் 100 கி.மீ. ஆகும். 50 கி.மீ., 25 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ தூரமாக இருந்தாலும் இதில் பங்கேற்கலாம்.
இதேவேளை, இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விழா செலவுகளுக்காக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் 25 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<