இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் RIDE ஆற்றல் பானம்

Sri Lanka Cricket – Energy Drink Partner

13

உள்நாட்டில் தயாரிக்கப்படும் இலங்கையின் முன்னணி ஆற்றல் பானமான ‘RIDE’, இலங்கை கிரிக்கெட் சபையுடன் அடுத்த இரண்டு வருட காலத்திற்கு உத்தியோகப்பூர்வ ஆற்றல் பான பங்காளராக ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதற்கான ஒப்பந்தத்தில் Cargills Ceylon PLC இன் துணை நிறுவனமான Cargills Food and Beverage Limited நிறுவனம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையும் நேற்று முன்தினம் (04) கொழும்பு கிங்ஸ்பறி ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கையெழுத்திட்டது 

2027 வரை செல்லுபடியாகும் இந்த அனுசரணை ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகளில் இரு அணிகளுக்கும் அதிகாரப்பூர்வ ஆற்றல் பான வழங்குநராக RIDE செயல்படும் என்று இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டது. 

இந்த கூட்டாண்மை பற்றி கருத்து தெரிவித்த Cargills Food and Beverage Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன குமாரசிங்க, ‘கிரிக்கெட் என்பது இலங்கை கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய விளையாட்டாகும். இது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களை இணைக்கிறது. எங்கள் நோக்கம் மிகவும் எளிமையானது. நாங்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் இலங்கையர்களுக்கு RIDE சக்தியை கொண்டு வருகிறோம்என்றார். 

இலங்கை கிரிக்கெட்டுடனான இந்த கூட்டாண்மை மூலம், கார்கில்ஸ் தனது ஆற்றல் பான வர்த்தகநாமத்தை இலக்கு சந்தைக்கு உயர்த்த முடியும் என்று நம்புவதாக இலங்கை கிரிக்கெட்டின் பிரதிச் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்தார். 

2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட RIDE ஆற்றல் பானமானது, கடந்த நான்கு ஆண்டுகளில் பேரங்காடிகள், சிறு வணிக நிலையங்கள் மற்றும் உணவு சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையுடனான இந்தப் புதிய கூட்டாண்மையானது, RIDE ஆற்றல் பானத்தின் புதிய வடிவமைப்பு வெளியீட்டுடன் ஒன்றிணைந்து நடைபெறுகிறது. புதுப்பொலிவுடன் கூடிய RIDE, இலங்கை மக்களுக்கு கூடுதல் ஆற்றலை வழங்கி, அன்றாட வாழ்க்கைச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், வாழ்க்கையின் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கத் தேவையானஉண்மையான சக்தியாகதிகழ்வதற்கான தனது குறிக்கோளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 

இந்த நிகழ்வில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித் தலைவர் சரித் அசலன்க, மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<