சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் நிறைவில் இலங்கை அணி 263 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, மேலதிகமாக விக்கெட்டிழப்பின்றி 19 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
சீரற்ற காலநிலை காரணமாக உணவு இடைவேளைக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில், 4.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டநேரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இலங்கை அணி சார்பில், தனன்ஜய டி சில்வா 87 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 6 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சயீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
போட்டியை பொருத்தவரை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 202 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதில், குசல் மெண்டிஸ் மற்றும் அணிக்குள் மீள இடம்பிடித்திருந்த தினேஷ் சந்திமால் ஆகியோர் ஏமாற்றியிருந்தனர். குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தினேஷ் சந்திமால் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில், தனன்ஜய டி சில்வா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். இதில், நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தனன்ஜய டி சில்வா விக்கெட்டினை விட்டுக்கொடுக்கமால் துடுப்பெடுத்தாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Dimuth Karunarathne | lbw b Shaheen Shah Afridi | 59 | 110 | 9 | 0 | 53.64 |
| Oshada Fernando | c Haris Sohail b Naseem Shah | 40 | 81 | 6 | 1 | 49.38 |
| Kusal Mendis | c Mohammad Rizwan b Usman Khan | 10 | 47 | 1 | 0 | 21.28 |
| Angelo Mathews | c Ashad Shafiq b Naseem Shah | 31 | 77 | 4 | 0 | 40.26 |
| Dinesh Chandimal | b Mohammad Abbas | 2 | 7 | 0 | 0 | 28.57 |
| Dhananjaya de Silva | not out | 102 | 166 | 15 | 0 | 61.45 |
| Niroshan Dickwella | c Babar Azam b Shaheen Shah Afridi | 33 | 63 | 4 | 0 | 52.38 |
| Dilruwan Perera | not out | 16 | 34 | 2 | 0 | 47.06 |
| Extras | 15 (b 5 , lb 7 , nb 3, w 0, pen 0) |
| Total | 308/6 (97 Overs, RR: 3.18) |
| Fall of Wickets | 1-96 (30.1) Dimuth Karunarathne, 2-109 (35.3) Oshada Fernando, 3-120 (41.6) Kusal Mendis, 4-127 (44.2) Dinesh Chandimal, 5-189 (63.4) Angelo Mathews, 6-256 (84.3) Niroshan Dickwella, |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Mohammad Abbas | 27 | 9 | 72 | 1 | 2.67 | |
| Shaheen Shah Afridi | 22 | 7 | 58 | 2 | 2.64 | |
| Usman Khan | 15 | 4 | 54 | 1 | 3.60 | |
| Naseem Shah | 27 | 5 | 92 | 2 | 3.41 | |
| Haris Sohail | 3 | 0 | 12 | 0 | 4.00 | |
| Sahan Masood | 1 | 1 | 0 | 0 | 0.00 | |
| Ashad Shafiq | 2 | 0 | 8 | 0 | 4.00 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Sahan Masood | c Dinesh Chandimal b Kasun Rajitha | 0 | 12 | 0 | 0 | 0.00 |
| Abid Ali | not out | 109 | 201 | 11 | 0 | 54.23 |
| Azhar Ali | c Dimuth Karunarathne b Lahiru Kumara | 36 | 81 | 4 | 0 | 44.44 |
| Babar Azam | not out | 102 | 128 | 14 | 0 | 79.69 |
| Extras | 5 (b 2 , lb 0 , nb 2, w 1, pen 0) |
| Total | 252/2 (70 Overs, RR: 3.6) |
| Fall of Wickets | 1-3 (2.5) Sahan Masood, 2-90 (31.5) Azhar Ali, |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Kasun Rajitha | 6 | 2 | 5 | 1 | 0.83 | |
| Vishwa Fernando | 13 | 1 | 49 | 0 | 3.77 | |
| Lahiru Kumara | 14 | 4 | 46 | 1 | 3.29 | |
| Dilruwan Perera | 24 | 0 | 85 | 0 | 3.54 | |
| Dhananjaya de Silva | 11 | 0 | 48 | 0 | 4.36 | |
| Oshada Fernando | 1 | 0 | 3 | 0 | 3.00 | |
| Kusal Mendis | 1 | 0 | 14 | 0 | 14.00 | |



















