RCB அணியின் பயிற்சியாளரில் அதிரடி மாற்றம்

619

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 போட்டிகளில் ஆடும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி, அதனது துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகியோரை மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கேரி கிஸ்டன், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அவர்களின் குறித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பதவி விலக்கப்பட்ட நிலையில் றோயல் செலஞ்சர்ஸ் அணி அதன் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் கெடிச்சை நியமனம் செய்துள்ளது.    

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்…

இதேநேரம், நியசிலாந்தை சேர்ந்த மைக் ஹேஸன் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் புதிய கிரிக்கெட் இயக்குனராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். 

முன்னதாக றோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நியூசிலாந்தின் முன்னாள் சுழல் நட்சத்திரம் டேனியல் விட்டோரி நீக்கப்பட்டார். பின்னர் 2018ஆம் ஆண்டின் ஐ.பி.எல். பருவகாலத்தின் போது இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேரி கிஸ்டன் ஆகியோர் முறையே றோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டப் பயிற்சியாளர்களாக நியமனம் பெற்றிருந்தனர். 

எனினும், இந்த இரண்டு பயிற்சியாளர்கள் மூலமும் பயிற்றுவிக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல். தொடரின் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் சிறந்த பதிவுகளை வெளிக்காட்ட தவறியிருந்தது.  இவ்வாறான நிலையிலையே இருவரினையும் பதவிகளில் இருந்து றோயல் செலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகம் நீக்கியிருக்கின்றது. 

றோயல் செலஞ்சர்ஸ் அணியின் நிறைவேற்று இயக்குனரான சஞ்சீவ் சூரிவாலா, இரண்டு பயிற்சியாளர்களையும் நீக்கி தற்போது புதிதாக ஒரு தலைமைப் பயிற்சியாளரை மட்டும் நியமித்திருப்பது றோயல் செலஞ்சர்ஸ் அணி உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அத்தியவசியமான ஒரு விடயம் என தெரிவித்திருந்தார். 

ஒருநாள் போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்…

தற்போது றோயல் செலஞ்சர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சைமன் கெடிச், கடந்த ஐ.பி.எல். பருவகாலம் வரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் சைமன் கெடிச், கரீபியன் ப்ரீமியர் லீக் T20 தொடரில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றார். சைமன் கெடிச்சின் ஆளுகையில் இருந்த ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கரிபீயன் ப்ரீமியர் லீக் T20 தொடரில் தொடர்ச்சியாக சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் இதுவரையில் ஐ.பி.எல். சம்பியன் பட்டம் எதனையும் வெல்லாது இருக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணி, புதிய பயிற்சியாளரின் கீழ் அடுத்த பருவகாலத்தில் சிறந்த பதிவுகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<