தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்த லசித் எம்புல்தெனிய

1576

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் தென்னாபிரிக்க அணி நிர்ணயம் செய்த வெற்றி இலக்கை (304) அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி ஸ்திர நிலையில் காணப்படுகின்றது.

புதன்கிழமை (13) டர்பன் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களை குவித்த பின்னர், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களினால் இலங்கைக்கு பதிலடி தந்த தென்னாபிரிக்கா

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்…

இதனை அடுத்து 44 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்க அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 126 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (14) நிறைவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் 25 ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்று தமது தரப்பை வலுப்படுத்தியிருந்தனர்.

இன்று (15) போட்டியின் மூன்றாம் நாளில் தென்னாபிரிக்க அணி இலங்கை அணியினை விட மொத்தமாக 170 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது  இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தில் களத்தில் நின்ற டு ப்ளெசிஸ் – டி கொக் ஆகிய இருவரும் தங்களது அரைச்சதங்களை பூர்த்தி செய்து தமது தரப்பினை இன்னும் வலுப்படுத்தினர். மேலும், இருவரும் தென்னாபிரிக்க அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பகிர்ந்திருந்தனர்.

Photos: Sri Lanka tour of South Africa 2019 | 1st Test – Day 3

இதில், இப்போட்டியில் பெற்ற இரண்டாவது அரைச்சதத்தோடு தனது 16ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை பதிவு செய்த குயின்டன் டி கொக் இலங்கையின் அறிமுக சுழல் வீரர் லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து தென்னாபிரிக்காவின் 5ஆவது விக்கெட்டாக மைதானத்தைவிட்டு வெளியேறினார். டி கொக் ஆட்டமிழக்கும் போது 6 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டி கொக்கினை அடுத்து பின்வரிசை துடுப்பாட்ட வீரரான வெர்னன் பிலாந்தர் அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் உடன் இணைந்து மூன்றாம் நாளுக்கான மதிய உணவு இடைவேளையை தாண்டி சிறிது நேரம் வரை தென்னாபிரிக்க அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (60) ஒன்றை பகிர்ந்தார்.

எனினும், தென்னாபிரிக்க அணியின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டம் இலங்கை அணியின் அறிமுக சுழல் வீரர் லசித் எம்புல்தெனியவினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எம்புல்தெனியவினால் போல்ட் செய்யப்பட்டிருந்த வெர்னன் பிலாந்தர் தென்னாபிரிக்க அணியின் ஆறாம் விக்கெட்டாக 18 ஓட்டங்களுடன்  மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

>>வீரர்களுடன் சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதாக அர்ஜுன அறிவிப்பு

பிலாந்தரின் விக்கெட்டின் பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு நம்பிக்கை தந்து கொண்டு களத்தில் நின்ற பாப் டு ப்ளெசிஸின் விக்கெட்டும் பறிபோனது. விஷ்வ பெர்னாந்துவினால் LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட டு ப்ளெசிஸ் தனது 20ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 11 பெளண்டரிகள் அடங்கலாக 90 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டு ப்ளெசிஸின் விக்கெட்டினை அடுத்து ஒரு கட்டத்தில் 255 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி தமது இறுதி மூன்று விக்கெட்டுக்களையும் வெறும் 4 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக 259 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் பின்வரிசை வீரர்களை இவ்வாறு மிகவும் குறுகிய இடைவெளிக்குள் ஓய்வறை அனுப்ப முக்கிய பங்களிப்புச் செய்த அறிமுக சுழல் வீரர் லசித் எம்புல்தெனிய 66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். மேலும், எம்புல்தெனிய இந்த பந்துவீச்சு பெறுதி மூலம் இலங்கை அணிக்காக கன்னி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த நான்காவது வீரராகவும் மாறியிருந்தார். மறுமுனையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாந்துவும் தென்னாபிரிக்காவின் 4 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 304 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருடன் ஆரம்பித்த இலங்கை அணி மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை நல்ல ஆரம்பத்தை காட்டிய போதிலும் அதன் பின்னர் துரித கதியில் தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரை இழந்தது.

இதில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோன திரிமான்ன 21 ஓட்டங்களை குவிக்க, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 20 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதேநேரம், இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் இந்த இன்னிங்ஸில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் முதல் இன்னிங்ஸ் போன்று மற்றுமொரு ஏமாற்றத்தை தந்திருந்தார்.

எனினும், புதிய துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த ஓஷத பெர்னாந்து மற்றும் குசல் பெரேரா ஆகியோர் நிதானமான முறையில் துடுப்பாடி நல்ல இணைப்பாட்டம் ஒன்றை (31) உருவாக்கி வந்த நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறைவுக்கு வந்தது. அதன்படி, மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 28 ஓவர்களுக்கு 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

இலங்கை வீரர்கள் எவரும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை – ஹரீன் பெர்னாண்டோ

இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற எந்தவொரு வீரரும் ஊழல்…

இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற இன்னும் 221 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் ஓஷத பெர்னாந்து 28 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா 12 ஓட்டங்களுடனும் நின்று தமது தரப்பிற்கு நம்பிக்கை தருகின்றனர்.

இதேநேரம் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ககிஸோ றபாடா, வெர்னன் பிலாந்தர் மற்றும் டூஆன்னே ஒலிவியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<