சுப்பர் 8 போட்டிகளில் வெற்றியை தமதாக்கிய SSC, NCC, துறைமுக அணிகள்

128

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு நாட்கள் கொண்ட மூன்று சுப்பர் 8 போட்டிகள் இன்று (08) மூன்றாவது நாளுடனேயே நிறைவடைந்தன. அதேபோன்று இன்றைய தினம் மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டமும் நடைபெற்றது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சானக்க கோமசாரு மற்றும் மதுக லியனபதிரணகே விக்கெட்டுகளை சாய்க்க கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக இலங்கை துறைமுக அதிகாரசபை அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

>> இன்னிங்ஸ் வெற்றியுடன் இரண்டு நாட்களில் போட்டியை முடித்த சிலாபம் மேரியன்ஸ் <<

இன்னிங்ஸ் தோல்வி ஒன்றைத் தவிர்க்க 318 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் மூன்றாவது நாளில் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இம்முறை பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வரிசையில் மலிந்த புஷ்பகுமாரவுக்கு (65) அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சானக்க கோமசாரு (63) 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லியனபதிரனகே 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 92 (26.3) – சானக்க கோமசாரு 5/38, மதுக லியனபதிரனகே 4/44

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) -410/9d (113.5) – நிக் கொம்ப்டன் 98, இஷான் ரங்கன 67, கயான் மனீஷன் 54*, நிசல் ரந்திக்க 42, யொஹான் டி சில்வா 40, கிஹான் ரூபசிங்க 33, பிரபாத் ஜயசூரிய 3/115, பிரியமல் பெரேரா 2/34, நிசல தாரக்க 2/73

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184 (72.3) – விஷாட் ரந்திக்க 67, பிரியமல் பெரேரா 54, பசிந்து லக்ஷங்க 44, மதுக லியனபதிரணகே 4/42, சானக்க கோமசாரு 5/80

முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களால் வெற்றி

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் NCC

சச்சிந்த பீரிஸின் அபார பந்துவீச்சு மூலம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் NCC அணி 313 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 440 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 126 ஓட்டங்களுக்கே சுருண்டது. முதல்தர போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டிய சச்சிந்த பீரிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இந்த போட்டியில் அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்   

NCC (முதல் இன்னிங்ஸ்) – 284 (83) – தரிந்து கௌஷால் 131, சதுரங்க டி சில்வா 59, லசித் அம்புல்தெனிய 24*, மொஹமட் டில்ஷாட் 3/38, ரனித்த லியனாரச்சி 2/45, சச்சித்ர பெரேரா 3/72

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 132 (43.5) – ரனித லியனாரச்சி 37, சாமிக்க கருணாரத்ன 4/38, லசித் அம்புல்தெனிய 3/19, சச்சிந்த பீரிஸ் 3/41

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 287/9d (61) – சதுரங்க டி சில்வா 79, நிமேஷ் குணசிங்க 71*, அஞ்செலோ பெரேரா 44, லஹிரு உதார 26, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/58, மொஹமட் டில்ஷாட் 2/66, ரனித்த லியனாரச்சி 2/87  

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 126 (40.3) – நவிது விதானகே 31, சச்சிந்த பீரிஸ் 6/49, லசித் அம்புல்தெனிய 2/27, சாமிக்க கருணாரத்ன 3/37

முடிவு – NCC அணி 313 ஓட்டங்களால் வெற்றி

SSC எதிர் BRC

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் BRC அணி நிர்ணயித்த 185 ஓட்ட இலகுவான வெற்றி இலக்கை எட்டி SSC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

>> டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார << 

SSC அணி சார்பில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரர் கௌஷால் சில்வா 85 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்தன 66 ஓட்டங்களையும் குவித்து SSC அணியின் வெற்றிக்கு உதவினர்.

போட்டியின் சுருக்கம்

BRS (முதல் இன்னிங்ஸ்) – 200 (63.4) – ஹர்ஷ விதான 77, திலகரத்ன சம்பத் 42, ருமேஷ் புத்திக்க 25, ஆகாஷ் சேனாரத்ன 5/52, சச்சித்ர சேனநாயக்க 2/49

SSC (முதல் இன்னிங்ஸ்) – 199 (62) – கௌஷால் சில்வா 42, மினோத் பானுக்க 35, சாமர கபுகெதர 33, சரித் அசலங்க 29, மிலிந்த சிறிவர்தன 23, ஹஷேன் ராமனாயக்க 6/18, சாமிக்கர எதிரிசிங்க 2/40, திலகரத்ன சம்பத் 2/54   

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 183 (76.2) – ஹஷேன் ராமனாயக்க 36, விகும் சஞ்சய 29, ருமேஷ் புத்திக்க 23, ஆகாஷ் சேனாரத்ன 4/36, கசுன் மதுஷங்க 3/51, சச்சித்ர சேனநாயக்க 3/39

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 187/2 (39.5) – கௌஷால் சில்வா 85*, மிலிந்த சிறிவர்தன 66

முடிவு – SSC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகளின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197 (65) – தரங்க பரணவிதான 69, சிதார கிம்ஹான் 42, ரமித் ரம்புக்வெல்ல 28, தினெத் திமோத்ய 24, தினுக்க ஹெட்டியாரச்சி 6/64, சச்சித் பதிரண 2/05   

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 442 (100.1) – லசித் அபேரத்ன 115, சச்சித் பதிரண 70, அஷான் பிரியஞ்சன் 66, மலிந்து மதுரங்க 49, ரொன் சந்திரகுப்தா 37, கவீன் பண்டார 31, ரமித் ரம்புவெல்ல 3/135, தரங்க பரணவிதான 2/00

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 10/0 (8)

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (51) – நிசல் பிரான்சிஸ்கோ 35, லஹிரு பெர்னாண்டோ 32, கோஷான் தனுஷ்க 31, நிபுன் ஹக்கல 20, சவித் பிரியன் 4/69, டிலேஷ் குணரத்ன 2/25, மதுர லக்மால் 2/25  

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 381/5 (136) – பதும் நிஸ்ஸங்க 111, நதீர நாவல 105*, ஷிரான் ரத்னாயக்க 46, ரமிந்து டி சில்வா 31

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 90 (29.2) – பிரிமோஷ் பெரேரா 23*, யசோத மெண்டிஸ் 4/32, துஷான் விமுக்தி 3/18, சீகுகே பிரசன்ன 2/29

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 211 (55.4) – லியோ பிரான்சிஸ்கோ 58, அஜந்த மெண்டிஸ் 37, யசோத மெண்டிஸ் 29, டில்ஷான் டி சொய்சா 27, HRC டில்ஷான் 5/75, கோசல குலசேகர 2/36, தரிந்து ரத்னாயக்க 2/36

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 314 (83.5) – சாமர சில்வா 93, கோசல குலசேகர 66, சரித்த குமாரசிங்க 38, பபசர வாதுகே 37, மல்க மதுசங்க 4/82

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 15/5 (6.4) – HRC டில்ஷான் 3/02, கோசல குலசேகர 2/11

மூன்று போட்டிகளினதும் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.