இலங்கைக் குழாமில் பிரதீப் மற்றும் குலசேகர : வெளியேற்றப்பட்ட திக்வெல்ல

746
Nuwan, pradeep in: Dikwella out

நாளை(28) தம்புள்ள ரங்கிரி சர்வதேச அரங்கில் இடம்பெறவிருக்கும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சுத் துறைக்குப் பலம் சேர்ப்பதற்காக நுவான் பிரதீப் மற்றும் நுவான் குலசேகர ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

முதன் முறையாக 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண சம்பியனாக முடிசூடிய ரிச்மண்ட் கல்லூரி

முதலாவது  ஒருநாள் போட்டியின் முதல் இனிங்ஸின் இறுதி நேரத்தில் கையில் பந்தடிபட்ட லக்மாலினது இடம் வெற்றிடமாவதற்கு மாற்றீடாகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் இடம்பெற்ற போட்டிக்கு முன்னைய ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அதில் அவர், நாங்கள் நுவான் குலசேகர, நுவான் பிரதீப் ஆகியோரை இலங்கைக் குழாமில் இணைத்துள்ளோம். லக்மாலின் உடற்தகுதி இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்பதுவே இதற்கான பிரதான காரணம். இதற்குப் பிரதியீடாக ஒருவரை நாளை காலையில் அழைப்பதை  விட இருவரையும் முதலிலேயே இணைத்திருப்பது சிறப்பாக இருக்கும் என்பதாலும், வேறுசில வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க ஏதுவாக இருக்கும் எனவும் கருதியே இவர்களை இணைத்துள்ளோம் என்றார்.

இலங்கையினுடைய அனுபவப் பந்து வீச்சாளரான குலசேகர இறுதியாக கடந்த மாதம்  தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள்  போட்டியில் பங்கெடுத்திருந்தார். அதேபோன்று, பிரதீப் இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரிற்குப் பின்னர் ஒருநாள் அணிக்குத் திரும்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியின்போது இலங்கை அணியினர் பங்களாதேஷ் அணியினருக்கு 324 ஓட்டங்களை  விட்டுக்கொடுத்திருந்தனர். இது இலங்கைக்கெதிராக பங்களாதேஷ் அணி பெற்ற அதிகூடிய ஓட்டமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு, பங்களாதேஷினுடைய மூன்றாவது அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியை இழந்துள்ள நிலையில் தொடரைத் தக்க வைப்பதற்கு இலங்கை நாளைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் பாதி அபாரத்துடன் புனித அந்தோனியார் கல்லூரியை வீழ்த்திய புனித ஜோசப் கல்லூரி

குருசிங்கவின் கருத்தின்படி இலங்கைக் குழாம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அவர், முதல் போட்டியிலடைந்த தோல்வியின் அழுத்தம் எம் மீது இருக்கின்ற போதும், எமது அணி அப்போட்டியிலடைந்த தோல்விக்குப் பின்னர் மிகுந்த உத்வேகத்துடன் உள்ளது என்றார்.

இதேவேளை, தொடர்ச்சியாக சிறப்புப் பெறுதிகளை வெளிப்படுத்தி வரும் நிரோஷன் டிக்வெல்ல இரண்டாவது போட்டிக்காக அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

இன்று காலை இடம்பெற்ற பயிற்சிகளின்போது கை விரல் உபாதைக்கு உள்ளாகியுள்ள அவர், அதிலிருந்து மீள்வதற்காக அணியில் இருந்து விலகி ஓய்வு பெறவுள்ளார். அவருக்குப் பதிலாக நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் டில்ருவன் பெரேரா அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு மிகப் பெரிய  வலுச்சேர்ப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இவரது மீள்வருகை, இறுதி நேரத்தில் தடைப்பட்டிருப்பது இலங்கை அணிக்கு பெரும் இழப்பு மாத்திரமன்றி, ரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு