கவின் பீரிஸ் சதம்; லும்பினி கல்லூரிக்கு முதல் இனிங்ஸ் வெற்றி

229
U19 Cricket - Lumbini College vs President's College

ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி மற்றும் லும்பினி கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கான கிரிக்கட் போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன், முதல் இனிங்ஸில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களின் அடிப்படையில் லும்பினி கல்லூரி வெற்றியை சுவீகரித்து.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லும்பினி கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி 78.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. டில்ஷான் சிகர மற்றும் மாலக டி சில்வா ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். சச்சித லியனகே 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். லும்பினி கல்லூரி சார்பாக சிறப்பாகப் பந்துவீசிய கனிஷ்க மதுவந்த 64 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய லும்பினி கல்லூரி ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் பீரிஸ் 101 ஓட்டங்கள் விளாசினார். கனிஷ்க மதுவந்த மற்றும் வினு ஹேமால் முறையே 46 மற்றும் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, லும்பினி கல்லூரி 91.1 ஓவர்களில் 320 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜனாதிபதி கல்லூரி சார்பாக விக்ரமசூரிய (5/61) மற்றும் பிரமுக கயேஷன் (4/56) தமக்கிடையே 9 விக்கட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

தமது இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி போட்டி முடிவுறும் வேலையில் 3 விக்கட்டுகளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றது. டில்ஷான் சிகர ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களைப் பெற்றார். லும்பினி கல்லூரி சார்பாக பந்துவீச்சில் தனுக 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி
முதல் இன்னிங்ஸ் – 265/10 (78.2 ஓவர்களில்)
டில்ஷான் சிகர 59, மாலக டி சில்வா 52, சச்சித லியனகே 4
கனிஷ்க மதுவந்த 3/64

லும்பினி கல்லூரி
முதல் இன்னிங்ஸ் – 320/10 (91.1 ஓவர்களில்)
கவின் பீரிஸ் 101, கனிஷ்க மதுவந்த 46, வினு ஹேமால் 42
விக்ரமசூரிய 5/61, பிரமுக கயேஷன் 4/56

ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ் – 50/3 (11 ஓவர்களில்)
டில்ஷான் சிகர 31*
தனுக 2/20