தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது அத்தியாயம் ஒத்திவைப்பு

99th National Athletics Championship - 2021

262

இந்த ஆண்டுக்கான 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம், 10ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

எனினும், நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் இன்று (06) அறிவித்தது

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அத்தியாயம் கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது

குறிப்பாக நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தால் குறித்த தொடரில் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் ஆகஸ்ட்டில்

இந்த நிலையில், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை, எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது

எனினும், நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் இன்று அறிவித்தது.

இதன்படி, போட்டிகள் நடைபெறுகின்ற தினம் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<