தேசிய வேகநடை சம்பியன்களாக முடிசூடிய துனுகார, கயானி

76

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான வேகநடைப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் எஸ். துனுகாரவும், பெண்கள் பிரிவில் பீ.பி கயானியும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இவ்விருவரும் கடந்த வருட சம்பியன்களாக தெரிவாகிய என். அப்புஹாமி மற்றும் கே. மதுரிகா ஆகியோரை இம்முறை விளையாட்டு விழாவில் தோல்வியடையச் செய்திருந்தமை சிறப்பம்சமாகும்.

தேசிய மரதன் ஓட்ட சம்பியன்களாக சந்தனுவன், சுஜானி தெரிவு

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு …

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் வேகநடைப் போட்டிகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் நேற்று (27) நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்காக 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற இப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 90இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

  • ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்

இதில் ஆண்களுக்கான வேகநடைப் போட்டியை ஒரு மணித்தியாலம் 39 நிமிடங்கள், 26 செக்கன்களில் நிறைவு செய்த வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.எஸ் துனுகார முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த என்.அப்புஹாமி (ஒரு மணி. 40நிமி. 46செக்.) இரண்டாவது இடத்தையும், தென் மாகாணத்தைச் சேர்ந்த சி. பங்கமுவகெ (ஒரு மணி. 47நிமி. 50செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இப் பிரிவில் வட மத்திய மாகாணம் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், மேல் மற்றும் மத்திய மாகாணங்கள் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற தாய்லாந்து பயணமாகும் 8 இலங்கையர்

மூன்றாவது இளையோர் (18 வயதுக்குட்பட்ட) ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் …

இதேநேரம். பெண்களுக்கான வேகநடைப் போட்டியை ஒரு மணித்தியாலம் 52 நிமிடங்கள், 23 செக்கன்களில் நிறைவுசெய்த தென் மாகாணத்தைச் சேர்ந்த பீ.பி கயானி முதலிடத்தைப் பெற்றுக்கெண்டார்.

மேல் மாகாண வீராங்கனை கே மதுரிகா (ஒரு மணி. 54நிமி. 56செக்.) இரண்டாவது இடத்தையும், தென் மாகாண வீராங்கனை டி. தில்ஹானி (ஒரு மணி. 58நிமி. 08செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், பெண்கள் பிரிவில் தென் மாகாணம் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

இதேவேளை, இம்முறைப் போட்டிகளில் ஆண்கள் பிரிவிற்கான சுற்றுக்களை நடுவர்கள் தவறாக கணித்திருந்ததாகத் தெரிவித்து நான்கு போட்டியாளர்கள் ஆட்சேபனை கடிதமொன்றை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…