சதத்துடன் 12 விக்கெட்டுக்களை சாய்த்த ஜீவன் மெண்டிஸ்

403
 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரில் NCC அணி இமாலய வெற்றி ஒன்றை பெற்றதோடு CCC, SSC அணிகள் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றன. எஞ்சிய போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றன.

NCC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்கத்திற்குள் சுருண்ட சோனகர் விளையாட்டுக் கழகம் ​NCC அணிக்கு எதிரான போட்டியில் 543 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

SSC அணிக்காக இரட்டை சதம் குவித்த கெளஷால் சில்வா

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர…

தனது சொந்த மைதானத்தில் ஆடியபோதும் சோனகர் அணி அனைத்து துறைகளிலும் சோபிக்காத நிலையில் NCC அணிக்காக முதல் இன்னிங்ஸில் பெதும் நிஸ்ஸங்க மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஹசித் போயகொட சதம் பெற பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் சதுரங்க டி சில்வா மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின்த பீரிஸும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 330 (65.5) – பெதும் நிஸ்ஸங்க 163, அஞ்செலோ பெரேரா 61, தரிந்து கௌஷால் 4/72

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 81 (24.3) – இரோஷ் சமரசூரிய 26, சத்துரங்க டி சில்வா 6/32

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 367/7 (59) – ஹசித போயகொட 101, பெதும் நிஸ்ஸங்க 84, சாமிக்க கருணாரத்ன 82, ரமேஷ் மெண்டிஸ் 4/92

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 73 (21.1) – இரோஷ் சமரசூரிய 22*, சச்சின்த பீரிஸ் 6/45, சதுரங்க டி சில்வா 4/24

முடிவு – NCC 543 ஓட்டங்களால் வெற்றி

BRC எதிர் CCC

கட்டுநாயக்க, MCG மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CCC அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 498 ஓட்டங்கள் மூலம் BRC அணிக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

Photos : Army SC Vs Chilaw MCC | Major League Tier A Tournament 2018/2019

BRC அணி முதல் இன்னிங்ஸில் 105 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 393 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 105 (43.4) – ஹஷேன் ராமநாயக்க 24, விஷ்வ பெர்னாண்டோ 4/52, லஹிரு கமகே 3/19

CCC (முதல் இன்னிங்ஸ்) – 498/7d (119) – மினோத் பானுக்க 180, மாதவ வர்ணபுர 61, அஷான் பிரியஞ்சன் 69, லசித் அபேரத்ன 66

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 275 (79.2) – ருமேஷ் புத்திக்க 83, ஹஷேன் ராமனாயக்க 33, மலிந்த புஷ்பகுமார 5/82, வனிந்து ஹசரங்க 3/44

முடிவு – CCC இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்து, ஆஸி தொடர்களிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய அஞ்செலோ…

SSC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கௌஷால் சில்வாவின் இரட்டைச் சதம் மூலம் முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்ற SSC அணி நீர்கொழும்பு கிரிக்கெட் அணியுடனான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 234 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நீர்கொழும்பு அணி 188 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 212 (62.3) – சனித டி மெல் 43, விமுக்தி பெரேரா 3/33

SSC (முதல் இன்னிங்ஸ்) – 438/9d (113.2) – கௌஷால் சில்வா 210*, சதுன் வீரக்கொடி 63, சந்தகன் பத்திரன 4/126, உபுல் இந்திரசிறி 4/144

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 188 (44.1) – லசித் குரூஸ்புள்ளே 28, ஆகாஷ் செனரத்ன 3/68

முடிவு – SSC இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பனாகொடையில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்ச்சேச்சில் நடைபெற்ற இரண்டாவதும், இறுதியுமான…

இராணுவப்படை அணி சஞ்சிக்க ரித்மவின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸுக்கு 357 ஓட்டங்களை பெற்ற நிலையில் சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் ஓஷத பெர்னாண்டோ மற்றும் ரிசித் உபமால் சதம் பெற்றனர். இதனால் கடைசி நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 482 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸுக்கான புள்ளிகளையும் சுவீகரித்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 357 (124.4) – சஞ்சிக்க ரித்ம 119, லக்ஷான் எதிரிசிங்க 76, சாகர் பரேஷ் 3/111

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 482/9 (130) – ஓஷத பெர்னாண்டோ 140, ரிசித் உபமால் 104*, யஷோத லங்கா 76, ஹர்ஷ குரே 38, லக்ஷான் மதுசங்க 3/98

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

பியமால் பெரேராவின் இரட்டைச் சதம் மூலம் கோல்ட்ஸ் அணி பெற்ற 419 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுத்த பதுரெலிய அணி 420 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை பெற்றுக் கொண்டது. எனினும் கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.    

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 419/9d (150) – பியமால் பெரேரா 206*, விஷாட் ரந்திக்க 85, புத்திக்க சஞ்சீவ 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 420/9 (120) – லஹிரு சமரகோன் 71*, ஷிரான் ரத்னாயக்க 66, சுப்ரமனியம் ஆனந்த் 54, அலங்கார அசங்க 49, நிசல தாரக்க 4/90

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

Photos : Tamil Union C & AC Vs. Army SC | Major League Tier A Tournament 2018/19

ThePapare.com | Viraj Kothalawala | 17/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be…

தமிழ் யூனியன் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

துடுப்பாட்டம், பந்து வீச்சில் அனுபவ வீரர் ஜீவன் மெண்டிஸ் சோபித்தபோதும் துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிரான போட்டியை தமிழ் யூனியன் கழகம் சமநிலையில் முடித்துக் கொண்டது.

கொழும்பு, பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க 171 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி இறுதி நாள் ஆட்டநேர முடிவில் 296 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்து.

எனினும் ஜீவன் மெண்டிஸ் தமிழ் யூனியன் சார்பில் துடுப்பாட்டத்தில் 106 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் மொத்தம் 12 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245 (82) – ருவிந்து குணசேகர 66, பிரஷான் விக்கிரமசிங்க 59, ஜீவன் மெண்டிஸ் 9/53

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 416 (105.5) – ஜீவன் மெண்டிஸ் 106, சிதார கிம்ஹான 105, லஹிரு மிலன்த 58,  இமேஷ் உதயங்க 6/147

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 269/8 (76) – அதீஷ நாணயக்கார 137, கயான் மனீஷன் 65, ஜீவன் மெண்டிஸ் 3/106   

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<