நிசாந்த ரணதுங்கவிடம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிரினர் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை

188

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும்இ சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிசாந்த ரணதுங்கவிடம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிரினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி அலைவரிசையில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும்இ கிரிக்கட் ஒளிபரப்பு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி அலைவரிசையில் கடமையாற்றிய 100 இற்கும் மேற்பட்டவர்கள் பணியை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பழைய நிகழ்ச்சிகளை நிறுவனம் மறு ஒளிபரப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.