டெல்லி அணியின் வலைப்பந்துவீச்சாளராகும் இளம் இலங்கை வீரர்!

IPL 2024

74
IPL 2024

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

>>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு

லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்திருந்தார். இவ்வாறான நிலையில் சௌரவ் கங்குலி மற்றும் ரிக்கி பொண்டிங் ஆகியோரின் கீழ் விளையாடும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இவர் இடம்பெற்றுள்ளார்.

கருக சங்கெத் 19 வயதின் கீழ் தேசிய அணியில் விளையாடும் போது 16 போட்டிகளில் 27.68 என்ற சராசரியில் 22 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததுடன், சிறந்த பந்துவீச்சு பிரதியாக 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<