கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான 139ஆவது நீலங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
கொழும்பு SSC மைதானத்தில் இன்று (11) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் றோயல் கல்லூரிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணி ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மழை காரணமாக 30 ஓவர்கள் தடைப்பட்டது, போட்டியின் முடிவில் அதிக தாக்கம் செலுத்தும் காரணியாக மாறியது.
பசிந்து மற்றும் கவிந்துவின் அபார ஆட்டத்தால் மீண்டெழுந்த றோயல் கல்லூரி
கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு…
இதன்படி றோயல் கல்லூரி அணி இரண்டாவது ஆண்டாகவும் கௌரவ டி.எஸ். சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்த இரு கல்லூரிகளும் மோதிய கடந்த ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியும் சமநிலையில் முடிவுற்றது. எனினும் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 137 ஆவது நீலங்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமே றோயல் கல்லூரி அணி டி.எஸ். சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்தை தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (9) ஆரம்பமான றோயல் மற்றும் தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற றோயல் கல்லூரி அணித் தலைவர் பசிந்து சூரியபண்டார எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தனது முதல் இன்னிங்சில் 166 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அதிக நம்பிக்கையோடு தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த றோயல் கல்லூரி, 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. றோயல் கல்லூரி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் பசிந்து சூரிய பண்டார 46 ஓட்டங்களையும் கவிந்து மதரசிங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் புனித தோமியர் கல்லூரி, இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியபோதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 66 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளில் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித தோமியர் கல்லூரிக்காக துலித் குணவர்தன (59), ஷலின் டிமேல் (57) ஆகியோர் அரைச்சதம் பெற்றதோடு சிதார ஹபுஹின்ன 47 ஓட்டங்களை குவித்தார்.
Photos: Royal College vs S. Thomas’ College – 139th Battle of the Blues – Day 03
Photos: Royal College vs S. Thomas’ College – 139th Battle of the Blues…
இதன்படி கடைசி நாள் ஆட்டத்தின் கடைசித் தருவாயில் புனித தோமியர் கல்லூரி 227 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி சார்பில் உப தலைவர் கவிந்து மதரசிங்க ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றார். இதன் போது அவர் அணியின் தோல்வி நெருக்கடியை தவிர்க்க கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
புனித தோமியர் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவர் டெலோன் பீரிஸ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அவர் முதல் இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது
போட்டியை மீண்டும் பார்வையிட
Royal College vs S. Thomas’ College – 139th Battle of the Blues
The 139th Battle of the Blues cricket encounter between Royal College…




















