உலகின் மிகவும் பழமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் கிரிக்கெட் சமர், 139ஆவது தடவையாகவும் டி.எஸ் சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்துக்காக கொழும்பு SSC மைதானத்தில் இன்று (09) ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொழும்பு றோயல் கல்லூரியின் அணித் தலைவர் பசிது சூரியபண்டார முதலில் புனித தோமியர் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தார்.
வியாஸ்காந்த் பந்துவீச்சில் அசத்த யாழ் மத்திய கல்லூரி முன்னிலையில்
சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகள் மோதும் 112 ஆவது வடக்கின் பெரும் சமர் இன்று…
அதன்படி முதலில் களமிறங்கிய தோமியர் கல்லூரி, நிதானமாக விளையாடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டாலும் றோயல் கல்லூரியின் சுழல் பந்து வீச்சாளர் மனுல பெரேராவின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய துலித் குணரத்ன மற்றும் சாலின் டி மெல் முதல் விக்கெட்டுக்காக 27 ஓட்டங்களை பெற்றிருந்த போது, கமில் மிஷாரவின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டாக துலித் குணரத்ன 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மனுல பெரேரா நிதானமாக துடுப்பெடுத்தாடிய சாலின் டி மெல்லை ஆடுகளம் விட்டு அகற்றினார்.
அதேநேரம் மீண்டும் பந்துவீச்சில் அதிரடி காட்டிய மனுல பெரேரா, கிஷான் முனசிங்கவை நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து தோமியர் கல்லூரி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.
இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட வீரராகக் களமிறங்கிய கலன பெரேரா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தோமியர் கல்லூரி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
இறுதியில் புனித தோமியர் கல்லூரி 64.3 ஓவர்களை எதிர்கொண்டு 9 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.
தோமியர் கல்லூரி சார்பாக சிதார ஹபுஹின்ன 51 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும், மந்தில விஜேரத்ன 24 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பதிவு செய்தனர்.
றோயல் கல்லூரிக்காக சிறப்பாக பந்து வீசிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மனுல பெரேரா போட்டியின் போக்கை மாற்றிய அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்தி 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய றோயல் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது, 3 விக்கெட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதில் தோமியர் கல்லூரியின் அணித் தலைவர் கலன பெரேராவினால் வீசப்பட்ட முதல் ஓவரின் 3ஆவது பந்தில் போல்ட் முறையில் பாக்ய திசாநாயக்க ஒரு ஓட்டத்துடனும், பின்னர் களமிறங்கிய கயான் திஸாநாயக்க 6 ஓட்டங்களுடனும், கமில் மிஷார 8 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தனர்.
Photos: Royal College vs S. Thomas’ College – 139th Battle of the Blues – Day 01
ThePapare.com | Viraj Kothalawala & Brian Dharmasena | 08/03/2018 Editing and re-using images without…
தோமியர் கல்லூரியின் இன்றைய நாளுக்கான பந்துவீச்சில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலன பெரேரா றோயல் கல்லூரியின் 3 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தார்.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்




















