பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் 10ஆவது பருவத்தின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த ரோஹிட் சர்மா<<
கடந்த மாதம் காஷ்மீர் பஹால்கமில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கின்றது. இதனால் இரு நாடுகளிடையேயும் அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையிலையே PSL T20 தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.
இதன்படி PSL தொடரில் இன்னும் 8 போட்டிகள் எஞ்சியிருக்க தொடரானது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருப்பதோடு, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தலைவர் மொஹ்சின் நக்வி ”தொடரில் பங்கெடுக்கும் வீரர்களின் நலனை (well-being) கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய PSL தொடரின் போட்டிகளின் போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை நேற்று (08) ராவல்பிண்டியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த PSL தொடரின் கராச்சி கிங்ஸ் – பெசாவர் ஷல்மி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரொன் தாக்குதல்களினை அடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<