கமிந்து மென்டிசின் அபார துடுப்பாட்டத்தினால் ரிச்மண்ட் கல்லூரி வலுவான நிலையில்

175
U19 - Oct 12th

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான டிவிசன் 1 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெற்றன.

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி  

மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று  ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மாசோக கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்மாசோக கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 22.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் காலி ரிச்மண்ட் கல்லூரி சார்பாக திலும் சுதீர 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் தனஞ்சய லக்ஷான் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.  

திரிமான்ன, கபுகெதரவின் தேர்வை நியாயப்படுத்தும் லெப்ரோய்

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய காலி ரிச்மண்ட் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 64 ஓவர்கள் துடுப்பாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ரிச்மண்ட் கல்லூரி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கமிந்து மென்டிஸ் 158 ஓட்டங்களைப் பெற்றதுடன் தனஞ்சய லக்ஷான் 54 ஓட்டங்களையும், கசுன் தாரக மற்றும் ஆதித்ய சிறிவர்தன ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும், தவீச அபிசேக் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் தர்மாசோக கல்லூரி சார்பாக சஞ்சன மென்டிஸ் 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதலாவது இன்னிங்ஸ்) – 57 (22.3) – திலும் சுதீர 3/11, தனஞ்சய லக்ஷான் 3/23

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 364/5 (64) – கமிந்து மென்டிஸ் 158, தனஞ்சய லக்ஷான் 54, கசுன் தாரக 41, ஆதித்ய சிறிவர்தன 41, தவீஷ அபிஷேக் 33, சஞ்சன மென்டிஸ் 2/81


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

பல்லேகலை சிறைச்சாலை மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 68.1 ஓவர்களில் சகல  விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சில்வெஸ்டர் கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் நிம்சர அத்தனகல்ல 44 ஓட்டங்களையும், மனுமோகன் சாவித்திரன் 42 ஓட்டங்களையும், பசான் ஹெட்டியாராச்சி 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கந்தானை டி மெசனொட் கல்லூரி சார்பாக ரோமல் மெனுக 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் கிரிஷான் சஞ்சுல 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.  

இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய கந்தானை டி மெசனொட் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 239 (68.1) – நிம்சர அத்தனகல்ல 44, மனுமோகன் சாவித்திரன் 42, பசான் ஹெட்டியாராச்சி 30, மன்ஜித் ராஜபக்ஷ 25, கசுன் எதிரிவீர 22, ரோமல் மெனுக 5/72, கிரிஷான் சஞ்சுல 2/19

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 34/0 (11.2)

நாளை போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.