அவிந்து, மனுஜவின் துடுப்பாட்டத்தின் மூலம் சில்வஸ்டர் கல்லூரி வலுவான நிலையில்

174

பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான முதல் சுற்றுப் போட்டிக்கான, கண்டி சில்வஸ்டர் மற்றும் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பமாகியது.

வென்னப்புவ, அல்பர்ட் பீரிஸ் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, சில்வஸ்டர் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய அவ்வணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின்போது 85 ஓவர்கள் துடுப்பாடி 7 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அவ்வணி சார்பாக அவிந்து ஹேரத் மற்றும் மனுஜ பெரேரா ஆகியோர் முறையே 61, 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினர். அத்துடன் நிம்சர ஹெஷன் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

நேர்த்தியாக பந்து வீசிய செர்ஹர ரணதுங்க 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வஸ்டர் கல்லூரி: 242/7(85) – மனுஜ பெரேரா 54, அவிந்து ஹேரத் 61, சந்துல ஜயக்கொடி 32, கவிந்து முனவீர 24, நிம்சர ஹெஷன் 23*, செர்ஹர ரணதுங்க 4/59, நிபுன் தனஞ்சய 3/95