பேராயர் போன்ஜியன் ஞாபகார்த்த சவால் கிண்ணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு

368
St. Patrick's V St. Joseph's

யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு, புனித ஜோசப் கல்லூரி என்பவற்றுக்கு இடையிலான பேராயர் போன்ஜியன் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகளில், நான்கு வயதுப் பிரிவுகளில் மூன்றில் வெற்றிபெற்று கிண்ணத்தினை தமதாக்கியுள்ளது புனித பத்திரிசியார் கல்லூரி.

திருச் சிலுவைக் கல்லூரியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது புனித பத்திரிசியார்

இவ்வருடத்திற்கான பிரிவு I (டிவிஷன் I) பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்பியன்ஷிப்…

இந்த வருடத்திற்கான அனைத்து வயதிற்குட்பட்ட போட்டிகளும் யாழ் புனித பத்திரிசியார்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.

இதில், 12 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் 01-00 என்ற கோல் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக பத்திரிசியார் கல்லூரியின் றொவான்சன் தெரிவு செய்யப்பட்டார்.

14 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியிலும், 04-00 என்ற கோல்கள் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி இலகு வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பத்திரிசியார் கல்லூரியின் ஜோன்ராஜ் தனதாக்கினார்.  

16 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் 03-01 என்ற கோல்கள் கணக்கில் புனித ஜோசப் கல்லூரி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை ஜோசப் கல்லூரியின் நிரந்த மதுஷாந்த் தன்வசப்படுத்தினார்.

18 வயதின் கீழ் போட்டி

பிரிவு 1 (டிவிஷன் 1) இல் விளையாடி வரும் இரு பலம் பொருந்திய அணிகள் மோதிய போட்டியாக இது அமைந்திருந்து. குறித்த தொடரின் நடப்புச் சம்பியன்களான சென் ஜோசப் கல்லூரியும், கடந்த வருடம் பிரிவு 2இல் இரண்டாம் இடம்பெற்று இவ்வருடம் பிரிவு 1இற்கு தரமுயர்த்தப்பட்டிருக்கும் புனித பத்திரிசியார் கல்லூரியும் இப் போட்டியில் மோதியிருந்தன.  

கடந்த இரு நாட்களாக பெய்த மழையின் காரணமான மைதானத்தில் ஈரலிப்புத் தன்மை காணப்பட்டது. போட்டியின் போது முறையற்ற விதத்தில் சென். ஜோசப் கல்லூரி வீரர் ஆடியதன் காரணமாக தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை சிறப்பாகப் பயன்படுத்தி கோலாக்கினார் பத்திரிசியார் கல்லூரி வீரர் ஹெய்ன்ஸ்.

அதன் பின்னர் முறையற்ற விதத்தில் ஆடிய ஹெய்ன்ஸ் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.  

மைதானத்தின் ஈரலிப்பை வெற்றிகொண்டு கோலினை நோக்கி பந்தினை உதைவதிலும் நகர்த்துவதிலும் ஜோசப் கல்லூரி வீரர்கள் பலத்த சவாலினை எதிர்கொண்டனர்.  

பெனால்டி மூலம் பத்திரிசியார் கல்லூரிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு கோலுடன் நிறைவிற்கு வந்தது முதல் பாதி.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 01-00 புனித ஜோசப் கல்லூரி

இரண்டாவது பாதியின் சிறந்த முயற்சியாக, பத்திரிசியார் கல்லூரியின் டிலக்சன் கோலினை நோக்கி உதைந்த பந்து ஜோசப் கல்லூரி கோல்  காப்பாளரினால் சிறப்பான முறையில் தடுக்கப்பட்டது.

ஜோசப் கல்லூரியின் முன்கள வீரர்களின் தொடர் கோல் முயற்சிகளைத் தடுத்து, பந்தினை தமது அணியின் முன்கள வீரர்களுக்கு சிறப்பான முறையில் கடத்தினார் கிறிஸ் ரீபன்.

ஹெய்ன்சினால் நேரடி கோலிற்காக சிறப்பான முறையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

சுகததாச மைதானத்தில் கோல் மழை பொழிந்த புனித ஜோசப் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதுக்கு…..

பின்னர், பத்திரிசியார் கல்லூரியின் முன்னணி வீரரும், இளம் தேசிய அணியின் முன்னாள் வீரருமான சாந்தன் நேரடியாக ஒரு கோலினைப் பெற்றுக்கொடுத்து, அணியின் முன்னிலையினை இரட்டிப்பாக்கினார்.   

மீண்டுமொருமுறை பத்திரிசியார் கல்லூரிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை கோலாக மாற்றிய ஹெய்ன்ஸ், அணியினை மூன்று கோல்களினால் முன்னிலையடையச் செய்ததுடன், தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.  

எந்தவித கோலும் இன்றி இருந்த நிலையில், தமது முதல் கோலினைப் பெறுவதற்காக புனித ஜோசப் கல்லூரியினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே பலனளிக்காமல் சென்றன.   

இறுதியில் 3 கோல்கள் முன்னிலையில் வெற்றிபெற்றது புனித பத்திரிசியார் கல்லூரி அணி.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 03-00 புனித ஜோசப் கல்லூரி

போட்டியின் ஆட்ட நாயகன்கிறிஸ் ரீபன் (புனித பத்திரிசியார் கல்லூரி)