“அணிக்குள் ஏற்பட்டிருக்கும் போட்டித் தன்மை வரவேற்கத்தக்கது” – திமுத்

3606

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் புதிதாக உள்வாங்கப்படும் வீரர்கள் சிறப்பாக செயற்படுவது எதிர்காலத்தில் பலம் மிக்க அணியொன்றை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும் என அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் அணியில் நான்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், எந்தவித இன்னலையும் எதிர்நோக்காத இலங்கை அணி, மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

பிரியாவிடை பெற்றார் நுவன் குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……….

கடந்த காலங்களில் மேலதிக வீரர்கள் அல்லது புதிதாக அணிக்குள் உள்வாங்கப்படும் வீரர்கள் பிரகாசிக்க தவறிய காரணத்தால், பலம் மிக்க அணியொன்றை உருவாக்குவதற்கு இலங்கை அணி தடுமாறி வந்தது. ஆனாலும், பங்களாதேஷ்  அணிக்கு எதிரான இந்த தொடரில், மாற்றங்களை ஏற்படுத்திய போதும், புதிதாக அணிக்குள் வந்த வீரர்கள் அச்சமின்றி அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர்.

குறிப்பாக, சகலதுறை வீரர் தசுன் ஷானக நேற்றைய போட்டியில் 14 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை விளாசியதுடன், பந்துவீச்சில் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது மீள்வருகையை நிரூபித்துக்கொண்டார். அத்துடன் செஹான் ஜயசூரிய, வனிந்து ஹசரங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோரும் நேற்றைய போட்டியில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை  சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.

“நாம் அணியென்ற ரீதியில் சிறந்த மேலதிக வீரர்களை வைத்திருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் அணிக்குள் இருக்கும் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இது போன்ற போட்டியானது அணியை பலமிக்கதாக்கும். சிறந்த வீரர்கள் வெளியில் இல்லாமைதான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அந்த பிரச்சினை இல்லை. தேவையான நிறைய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

இன்றைய போட்டியிலும் (நேற்று) கூட நான்கு வீரர்களை அணியில் இணைத்திருந்தோம். அவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, ஏனைய வீரர்கள் தமது திறமையை நிரூபித்து அணியில் நிலைத்திருப்பதற்கு போராட வேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று திமுத் குறிப்பிட்டார்.  

இப்படி, அணிக்குள் வரும் வீரர்கள் சிறப்பாக செயற்படும் போது, எமது அணி பலம் மிக்கிதாக மாறும். திறமையுள்ள வீரர்கள் வெளியிலிருந்து தங்களுடைய வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் காரணத்தால், அணிக்குள் இருக்கும் வீரர்களுக்கு பிரகாசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், அடுத்த தொடரில் வீரர்கள் மேலும் சிறப்பாக பிரகாசிக்க எதிர்பார்த்திருப்பார்கள். 

கிடைத்திருக்கும் இந்த இளம் அணியை அணித் தலைவர் என்ற ரீதியில் நல்ல முறையில் வழிநடத்த எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக ஆடுகளத்தில் இளம் வீரர்கள் வெளிப்படுத்தும் சக்தியாது அணிக்கு மிகச்சிறந்த விடயமாகும்” என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

பங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொழும்பு …………

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இலங்கை அணி வைட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடரில் இம்மாத நடுப்பகுதியில் இலங்கை விளையாடவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<