சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே கொழும்பு NCC மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கையின் 19 வயதின் கீழ் அணி பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
இளையோர் டெஸ்ட் முதல் நாளில் பங்களாதேஷ் இளம் அணி ஆதிக்கம்
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள….
நேற்று (16) ஆரம்பமான இந்த இளையோர் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி, போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 58 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது.
பங்களாதேஷ் தரப்பு துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய அணித்தலைவர் தவ்ஹீத் ரித்தோய் 54 ஓட்டங்களுடனும், சமிம் ஹொசைன் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாளில் பெரிய மொத்த ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெறும் இலக்கோடு தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர். இதனால், இன்றைய நாளில் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமேலே தவ்ஹீத் ரித்தோய் (54) மற்றும் சமிம் ஹொசைன் ஆகியோரின் விக்கெட்டுக்கள் பறிபோனது.
தொடர்ந்தும் துடுப்பாட வந்த பங்களாதேஷ் இளம் வீரர்களுக்கு இலங்கையின் இளம் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான சமிந்து விஜேசிங்க நெருக்கடியாக அமைந்தார். இதனால், தடுமாற்றத்தை காண்பித்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 309 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
தேசிய அணி வீரர்களின் பங்களிப்போடு மாஸ் யுனிச்செலா, ஹேய்லஸ் அணிகளுக்கு வெற்றி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு…..
பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் ஆடிய அமைட் ஹசன் மட்டும் அரைச்சதம் ஒன்றுடன் 64 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதேநேரம், இலங்கை 19 வயதின் கீழ் அணியின் பந்துவீச்சு சார்பாக சமிந்து விஜேசிங்க 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அஷான் டேனியல், ரோஹான் சஞ்சய மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, 26 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 65 ஓட்டங்களை பெற்றிருந்தது.
களத்தில் நவோத் பரணவிதான 35 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்



















