சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இளையோர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.
இலங்கை இளையோர் அணிக்காக சதம் விளாசிய சொனால் தினுஷ
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை…
கடந்த செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 309 ஓட்டங்களை குவித்தது. இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கையின் 19 வயதின் கீழ் அணி 288 ஓட்டங்களையே பெற்றது.
பின்னர், சிறிய முன்னிலை (21) ஒன்றோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த நிலையில் போட்டியின் நேற்றைய (18) மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இன்று (19) தொடர்ந்த போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளில் சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி அஷான் டேனியல்-ரோஹான் சஞ்சய ஆகியோரின் அபார சுழல் பந்துவீச்சினால் நிலைகுலைந்தது.
இரண்டு வீரர்களினதும் திறமையான செயற்பாட்டின் காரணமாக பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 115 ஓட்டங்களை மட்டுமே தமது இரண்டாம் இன்னிங்ஸில் பெற்றது.
அடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா?
இலங்கை அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்று ஒருநாள்…
பங்களாதேஷ் இளம் அணியின் துடுப்பாட்டத்தில் அக்பர் அலி 42 ஓட்டங்களுடன் ஆறுதல் தர இலங்கை இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் அஷான் டேனியல் வெறும் 19 ஓட்டங்களை விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களையும், ரோஹான் சஞ்சய 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்துடன் 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.
இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் சமிந்து விஜேசிங்க 29 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ததோடு ஏனைய அனைவரும் மிகவும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.
இதேநேரம், பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணியின் பந்துவீச்சு சார்பாக சஹீன் அலம் மற்றும் ரகீபுல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ThePapare weekly sports roundup Episode 50
Uploaded by ThePapare.com on 2018-10-16.
இப் போட்டியின் வெற்றியோடு தமது இலங்கை சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி, இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணியை 22ஆம் திகதி கட்டுநாயக்க மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
முடிவு – பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















