மேஜேர் எமர்ஜிங் லீக்கில் அசத்தும் சதீர சமரவிக்ரம

3

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின், காலிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (18) முடிவடைந்தன. எனினும் நடைபெற்ற நான்கு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

கொழும்பு, CCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோல்ட்ஸ் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சோபித்தபோதும் அந்த அணியால் போட்டியை வெல்ல முடியாமல் போனது. எனினும் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்ஸுக்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

மேஜேர் எமர்ஜிங் லீக்கில் துடுப்பாட்டத்தில் அசத்தும் இளம் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங்…

முதல் இன்னிங்ஸில் 132 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாது இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 122 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 251 (67) – நிஷான் மதுஷ்க 88, ஹஷான் துமிந்து 40, ஜெஹான் டானியல் 51, சதீர சமரவிக்ர 26, சானுக்க டில்ஷான் 4/89, தரிந்து கௌஷால் 3/51

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 119 (34) – ரமேஷ் மெண்டிஸ் 26, பபசர வதுகே 23, மஹேஷ் திக்ஷன 3/10, நிசல தாரக்க 3/42, கவிஷ்க அன்ஜுல 2/31, ஜெஹான் டானியல் 2/21

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 352/6 (73) – சதீர சமரவிக்ரம 122, நிஷான் மதுஷ்க 89, அவிஷ்க பெர்னாண்டோ 51, ஜெஹான் டானியல் 54, ரமேஷ் மெண்டிஸ் 2/44, தரிந்து கௌஷால் 2/90  

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

 

SSC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

லசித் க்ரூஸ்புள்ளேயின் அபார சதத்தின் மூலம் SSC அணிக்கு நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் பதில் கொடுத்தது.

கொழும்பு, பி. சரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 72 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை பெற்றிருந்தது. லசித் க்ரூஸ்புள்ளே 127 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (52.3) – சம்த டி சில்வா 38, ஷிஹான் டிலசிறி 30, டிலான் ஜயலத் 28, சச்சின் டுல்பதடோ 21, லசித் க்ரூஸ்புள்ளே 27, ஆகாஷ் சேனாரத்ன 7/87

SSC (முதல் இன்னிங்ஸ்) – 264 (54.4) – சதுபம குணசிங்க 82, கேவியன் நிரேஷ் 40*, சம்மு அஷான் 35, ஆகாஷ் சேனாரத்ன 26, சமித்த டி சில்வா 4/55, சந்தகன் பத்திரண 2/109   

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 256/5 (51.4) – லசித் க்ரூஸ்புள்ளே 127, ஷிஹான் டிலசிறி 84, சஹன் ஆரச்சிகே 34, பதும் ஹசரங்க 2/0, சம்மு அஷான் 2/41

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

 

BRC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்த முதல் இன்னிங்ஸ் பூர்த்தியாகாத நிலையிலேயே போட்டி சமநிலையில் முடிந்தது.

 

இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா

இங்கிலாந்து அணி இன்று (16) பெற்றுள்ள 278 ஓட்டங்கள் என்ற முன்னிலையானது, இந்த ஆடுகளத்தை பொருத்தவரை போதுமான ஓட்ட…

முதல் நாள் ஆட்டம் முழுவதும் BRC அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 357 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 357 (87) – ரமிந்த விஜேசூரிய 98, சவின் குணசேகர 70, ஹஷேன் ராமநாயக்க 48, பினுர பெர்னாண்டோ 56/3, இசுறு தனன்ஜய 21/2

தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 305/5 (85.3) – லஹிரு மிலந்த 76, பினுர பெர்னாண்டோ 91*, ரமித் ரம்புக்வெல்ல 54*, அவிந்து தீக்ஷன 28, கித்ருவன் விதானகே 20, விகும் சஞ்சய 2/75, டீ.எம். சம்பத் 2/82

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

 

காலி கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

வெலிசர, விமானநிலைய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காலி அணி ப்ளூம்பீல்ட் அணிக்கு நெருக்கடி கொடுத்து சமநிலையுற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக புள்ளிகளை பெற்றது.

முதல் நாளில் காலி அணி தனது முதுல் இன்னிங்ஸுக்காக 320 ஓட்டங்களை பெற்றதோடு ப்ளூம்பீல்ட் 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையு இழந்தது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320 (74.2) – பவந்த உடங்கமுவ 184, அவிந்து பெர்னாண்டோ 56, அசங்க சிங்கபுலி 4/69, இம்ரான் கான் 3/46, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 3/74

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 180 (61.1) – அசேல சிகேரா 46, இம்ரான் கான் 33, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 32, அரவிந்த பிரேமரத்ன 21, அஷேர் வர்ணகுலசூரிய 4/30, ரஜீவ் வீரசிங்க 4/78, கயான் சிறிசோம 2/56

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80/4 (24) – ஹர்ஷ விதானகே 30, ஷானுக்க பண்டார 21, அரவிந்த பிரேமரத்ன 4/30  

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<