அசிங்கமான நடத்தைக்காக சகிப், நூருலுக்கு ஐ.சி.சி அபராதம்

4045

[rev_slider LOLC]

எனினும் இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் பங்களாதேஷ் வீரர்கள் நடுவர்களின் முவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மோசமான முறையில் நடந்துக்கொண்டனர். அத்துடன் இலங்கைபங்களாதேஷ் வீரர்களுக்கிடையில் வாய் தர்க்கங்களும் இடம்பெற்றன. இதனையடுத்து பங்களாதேஷ் வீரர்கள் தங்களது உடைமாற்றும் அறையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில்

இந்நிலையில் இலங்கைபங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான T-20 போட்டியின் போது இடம்பெற்ற அநாகரிகமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை .சி.சி இன்றைய தினம் (17) மேற்கொண்டது.

இதன்படி, போட்டியின் போது நடுவரிடமும், இலங்கை அணித் தலைவர் திஸர பெரேராவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு .சி.சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறிய பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் மற்றும் அவ்வணியின் பதில் வீரராக இருந்த நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டி வருவாயில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்க .சி.சி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி .சி.சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட வீரர்களுக்கான ஒழுக்கக் கோவையின் புதிய விதிமுறையின்படி, களத்தில் இல்லாத வீரரும் ஒழுக்கக் குறைவாக நடந்து கொண்டால், தண்டப் புள்ளி அளிக்கும் முறை செயல்படுத்தப்படும். இதன்படி, குறித்த போட்டியில் பதில் வீரராக இருந்த நூருல் ஹசன் மற்றும் அணித் தலைவர் சகிப் அல் ஹசன் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேநேரம் இருவருக்கும் தலா ஒரு தண்டப் புள்ளியும் வழங்கப்பட்டது.

எனவே, இப்புதிய விதிமுறைகளுக்கமைய போட்டியொன்றில் இரண்டு வீரர்களுக்கு அபராதத்துடன், தண்டப் புள்ளிகள் வழங்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.  

சுதந்திர கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ்

இலங்கையுடனான சுதந்திர கிண்ண டி20 முத்தரப்பு தொடரின் பரபரப்பான போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற

நேற்றைய போட்டியின் இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இலங்கை அணி சார்பில் பந்து வீசிய இசுறு உதான முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சர் பந்தாக வீசினார். 2ஆவது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோபோல் கொடுக்கவில்லை. ஆடுகளத்தில் இருந்த மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோபோல் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனால் கொதிப்படைந்த அணித் தலைவர் சகிப் அல் ஹசன் நிலைமையை சமாதானம் செய்யாமல், எரியும் நெருப்பில் எண்ணெயை விடுவது போல நான்காவது நடுவரிடம் மோசமான முறையில் வாக்குவாதம் செய்தார். இதனால் போட்டி சற்று தாமதமாகியிருந்தது. இதன்போது மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகில் வந்த பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் துடுப்பாட்ட வீரர்களை போட்டியின் இடையே மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலித் மஹ்மூத், மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு செய்கை செய்ய போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.

மறுபுறத்தில் மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோபோலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச பதில் வீரரான நூருல் ஹசன், குளிர்பானத்துடன் களத்துக்குள் வந்தார். அவர் இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேராவுடன் காரசாரமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை வீரர்கள் அந்த பதில் வீரரை மைதானத்திலிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

Photos: Sri Lanka vs Bangladesh – Nidahas Trophy 2018 Match #6

ThePapare.com | Viraj Kothalawala | 16/03/2018 Editing

இதனையடுத்து போட்டி மத்தியஸ்தரின் வேண்டுகோளுக்கிணங்க .சி.சியினால் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்றன. இது குறித்து .சி.சி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன், நூருல் ஹசன் ஆகியோர் .சி.சியின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர். அந்த தவறையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சகிப் அல் ஹசனுக்கு 1 தண்டப் புள்ளியுடன் 25 சதவீதம் அபராதமும், நூருலுக்கு ஒரு தண்டப் புள்ளியுடன் 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீரர்கள் இதுபோல் தரம் தாழ்ந்து செயல்படுவதை எவரும் விரும்பமாட்டார்கள். அந்தப் போட்டி மிகவும் பரபரப்பான கட்டம், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருந்தது என்பதை புரிந்துகொள்கிறோம். ஆனால், சகிப், நூருல் ஹசன் ஆகியோரின் செயல்பாடுகளை ஏற்க முடியாது. அவர்கள் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளனர். நான்காவது நடுவரும், கள நடுவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிடாவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும் என போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.