அரியாலை சரஸ்வதியின் T10 தொடரின் ஆரம்பநாளில் ஜோனியன்ஸ்,சென்றலைட்ஸ் அணிகள் ஆதிக்கம்

262
T10 League

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் தேர்வு செய்யப்படட 12 கழக அணிகளிற்கிடையிலான T10 தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

முதலாவது சுற்று போட்டிகளிற்காக 12 அணிகளும் குழு ஒன்றிற்கு 3 அணிகள் வீதம் 4 குழுக்களாக நிரலிடப்பட்டிருக்கின்றன. இவை தமக்கிடையில் ஒவ்வொருமுறை மோதவேண்டும், குழு நிலை போட்டிகளின் நிறைவில் முதல் இரு இடங்களையும் பிடித்துக்கொள்ளும் அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

குழு விபரம்

ABCD
ஓல்ட் கோல்ட்ஸ்விங்ஸ்திருநெல்வேலிஏபி
சென்றலைட்ஸ்ஸ்டான்லியூனியன்ஸ்பற்றீசியான்ஸ்
அரியாலை மத்திஜோலி ஸ்டார்ஸ்ஜோனியன்ஸ்கொக்குவில் மத்தி

நேற்றையதினம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த, குறித்த சுற்றுப்போட்டியின் முதல் நாள் ஆடடத்தில் குழு A மற்றும் குழு C அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்றன. 

குழு A

ஓல்ட் கோல்ட்ஸ் எதிர் சென்றலைட்ஸ் 

ஓல்ட் கோல்ட்ஸ் 125/1 (10) – மதுசன் 66, ஸ்ரீகுகன் 41,தசோபன் 33 /1 

சென்றலைட்ஸ் 126/3 (9.3) – ஜெரிக் 47, கௌதமன் 30, பிரியலக்ஸன் 3/9

போட்டி முடிவு – 3 விக்கெட்டுக்களால் சென்றலைட்ஸ் அணி வெற்றி 

அரியாலை மத்தி எதிர் ஓல்ட் கோல்ட்ஸ் 

அரியாலை மத்தி 73/8 – ஸ்ரீ குகன் 2 /6 

ஓல்ட் கோல்ட்ஸ் 75/5 – மதுசன் 23, பிரியலக்சன் 17 

போட்டி முடிவு – 5 விக்கெட்டுக்களால் ஓல்ட் கோல்ட்ஸ் அணி வெற்றி 

சென்றலைட்ஸ் எதிர் அரியாலை மத்தி

சென்றலைட்ஸ் 114/3 – செல்டன் 64

அரியாலை மத்தி 86/8லிதுர்ஜன் 45, விதுஷன் 2 /26 

போட்டி முடிவு – 28 .ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணி வெற்றி 

>>Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Day 01

குழு C

யூனியன்ஸ் எதிர் ஜோனியன்ஸ்

யூனியன்ஸ் 52/9 – ஜோனியன்ஸ்  58/1

போட்டி முடிவு – 9 விக்கெட்டுக்களால் ஜோனியன்ஸ் அணி வெற்றி

யூனியன்ஸ் எதிர் திருநெல்வேலி 

யூனியன்ஸ் 125/3 (10) – சுஜாந்தன் 42, ஆகீசன் 25, அனுரதன் 30 /1 

திருநெல்வேலி 127/5  – தர்சிகன் 35, சுரேந்திரன் 18

போட்டி முடிவு – 5 விக்கெட்டுக்களால் திருநெல்வேலி அணி வெற்றி 

ஜோனியன்ஸ் எதிர் திருநெல்வேலி 

ஜோனியன்ஸ் 94/6  – பிருந்தாபன் 42,  சுரேஷ் 2/14

திருநெல்வேலி 75/6  – தர்சிகன் 35,  லோகதீஸ்வர் 3 / 2 

போட்டி முடிவு – 19 .ஓட்டங்களால் ஜோனியன்ஸ் அணி வெற்றி

குழு நிலை போட்டிகளின் நிறைவில் குழு A இலிருந்து சென்றலைட்ஸ், ஓல்ட் கோல்ட்ஸ் அணிகளும் குழு c   இலிருந்து ஜோனியன்ஸ்,திருநெல்வேலி அணிகளும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

எஞ்சிய குழு நிலை போட்டிகள் இன்று (11) இடம்பெறவுள்ள அதேவேளை, காலிறுதி போட்டிகள் நாளை இடம்பெறவிருக்கின்றன.

அரையிறுதி போட்டிகள்  மற்றும் இறுதி போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றன.