ஒரு போட்டியில் சச்சினின் இரு சாதனைகளை தகர்த்த ரோஹிட் சர்மா

141

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியின் மூலம் அவ்வணிக்கெதிராகவும், ஏதாவது ஒரு அணிக்கு எதிராகவும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2,000 ஓட்டங்களை கடந்த வீரர் எனும் இரு சாதனைகளை இந்திய வீரர் ரோஹிட் சர்மா படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவ்ராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான…..

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரின் நேற்று (09) நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இப்போட்டியில் இந்தியா 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியையையும் பதிவு செய்தது.

இந்திய அணியினுடைய வெற்றிக்கு ஆரம்பத் துடுப்பாட்டம் மிகவும் பலமாக அமைந்திருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சிகார் தவான் சதம் அடிக்க, மறுமனையில் விளையாடிய ரோஹிட் சர்மா அரைச்சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இதன்போது, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஒரு தனிப்பட்ட நபராக 2,000 சர்வதேச ஒருநாள் ஓட்டங்களை குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாகப் பெற்றவர் என்ற சாதனையை ரோஹிட் சர்மா படைத்தார்.  

இரசிகர்களுக்கு பதிலாக ஸ்மித்திடம் மன்னிப்புக் கோரிய கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் ஏனையோருக்கு தீய….

மேலும், அவ்வணிக்கெதிராக 2000 சர்வதேச ஒருநாள் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையையும், இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சர்மா பெற்றுக்கெண்டார். இதற்கு முன்னர் குறித்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார்.

குறித்த போட்டியில் கிளேன் மெக்ஸ்வெல் வீசிய பன்னிரண்டாவது ஓவரின் முதல் பந்தில் நான்கு ஓட்டமொன்றை அடித்ததன் மூலம் ரோஹிட் சர்மா இந்த சாதனையை படைத்தார்.  

சச்சின் டெண்டுல்கர் குறித்த 2000 ஓட்டங்களை கடப்பதற்கு 51 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்தார். ஆனால் ரோஹிட் சர்மா வெறும் 37 இன்னிங்ஸ்களில் கடந்து இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.  

இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை

வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் உபாதை ஒன்றினை…..

ரோஹிட் சர்மா (37 இன்னிங்ஸ்), சச்சின் டெண்டுல்கர் (40 இன்னிங்ஸ்), சேர். வி ரிச்சர்ட்ஸ் (44 இன்னிங்ஸ்), டெஸ்மொன்ட் ஹெய்ன்ஸ் (59 இன்னிங்ஸ்), ஆகிய நான்கு வீரர்கள் மாத்திரமே இதுவரையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 2,000 ஓட்டங்களை கடந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாதனை மாத்திரமல்லாது, ஒரு அணிக்கெதிராக வேகமாக 2,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் ரோஹிட் சர்மா படைந்துள்ளார்.

ஒரு அணிக்கெதிராக வேகமாக 2,000 ஓட்டங்களை கடந்தவர் பட்டியல்

வீரர்அணிஎதிரணிஇன்னிங்ஸ்
ரோஹிட் சர்மாஇந்தியரோஹிட் சர்மா37
சச்சின் டெண்டுல்கர்இந்தியஅவுஸ்திரேலியா40
சேர். வி ரிச்சர்ட்ஸ்மே. தீவுகள்அவுஸ்திரேலியா44
விராட் கோஹ்லிஇந்தியஇலங்கை45
மகேந்திர சிங் டோனிஇந்தியஇலங்கை45

32 வயதுடைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா இதுவரையில் 208 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 202 இன்னிங்ஸ்களில் 8,189 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 23 சதங்களும், 42 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<