வெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணியில் இணைந்துகொள்ளுமாறு வெளிநாட்டை தளமாகக் கொண்டு விளையாடும் வீரர்களுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார். 

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வெளிநாட்டை தளமாகக் கொண்ட வீரர்கள் உள்ளடக்கப்படுவதில்லை என்பது நீண்ட காலமாக எழும் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அநுர டி சில்வா இதனைத் தெரிவித்தார்

இலங்கை கால்பந்து அணியின் பலம், பலவீனங்கள் பற்றிக் கூறும் பகீர் அலி

மக்காவு அணிக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும்…..

ஜெர்மனியில் இலங்கை பெற்றொருக்கு பிறந்து தற்போது ஜெர்மனியின் நான்காம் பிரிவு அணியான Rot-Weiß Erfurt அணிக்காக ஆடும் 24 வயதுடைய மத்திய கள வீரர் வசீம் ராசிக் உட்பட பலர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியுடையவர்களாக உள்ளனர். வீரர்கள் பரிமாற்ற சந்தையில் வசீம் 175,00 யூரோக்கள் பெறுமதி கொண்டவராக உள்ளதோடு இரட்டை பிரஜா உரிமையை பெறுவதற்காக செயற்பட்டு வருகிறார்

அவரது இரு சகோதரர்களான மொஹமட் ராசிக் (22 வயது) மற்றும் முஷாகிர் ராசிக் (20 வயது) ஆகியோர் முறையே BFC Dynamo II மற்றும் Turkiyemspor Berlin அணிகளுக்காக ஆடுகின்றனர். இந்த இருவரும் கூட இலங்கை தேசிய அணிக்கு ஆடுவதற்கு தகுதி கொண்டவர்களாவர்

இலங்கைக்காக ஆடும் திறன் படைத்த மற்றொருவராக நிக்கி அஹமட் (28) உள்ளார். அவர் 2010 சம்பியன்ஸ் லீக்கிற்காக செல்சி கால்பந்து கழக குழாத்தில் இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அணிக்காக ஆடுகிறார்.

அண்மையில் தேசிய அணியில் இணைக்கப்பட்ட மார்வின் ஹமில்டன் (30) அண்மைக் காலத்தில் இலங்கை பிரதிநிதித்துவப் படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இரட்டைப் பிரஜா உரிமையை பெற பணியாற்றி வருகிறார்.  

இலங்கை வர மறுத்ததை எதிர்த்து கேலிக்கையாக கால்பந்து ஆடிய மக்காவு வீரர்கள்

இலங்கையில் நடைபெறவிருந்த பிஃபா உலகக் கிண்ண….

இவ்வாறான ஒரு நிலையில், குறித்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அநுர டி சில்வா, நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புபவர்களை வரவேற்றார்.   

மார்வின் ஹமில்டன் மற்றும் எம்மிடையே சிறந்த தொடர்பாடல் உள்ளது. காட்டாரில் பயிற்சிக் குழாத்திற்கு இணையும்படி அவரை நாம் கேட்டோம். அவர் பிரிட்டனில் இருந்து வந்தார். தற்போது அவர் இரட்டை பிரஜையை உரிமையைப் பெற செயற்பட்டு வருகிறார். தேசிய அணிக்கு விளையாடுவதற்கு அவர் விருப்பமுடன் உள்ளார். அவர் இலங்கை அணியில் ஆடுவதற்கு சாத்தியம் உள்ளது. அவருடன் செயற்படுவது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.   

வசீம் ராசிக்கும் இரட்டை பிரஜா உரிமையை பெற பணியாற்றி வருகிறார். அவர் விண்ணப்பித்திருக்கிறார், நாம் எதிர்பார்த்திருக்கிறோம். இங்கு ஆடுவதற்கு அவரின் சகோதரர்களும் கூட இரட்டை பிரஜா உரிமையை பெற விரும்புகின்றனர். அவர்கள் தேர்வுகளுக்காக மீண்டும் வரவேண்டும். ஏனைய வீரர்களுடன் தொடர்பாடலில் ஈடுபடுவது மற்றும் முன்னேற்ற, செயல்திறன் பற்றி நாம் அவதானிப்போம்

செல்சி கால்பந்து கழகத்தின் நிக்கி அஹமட் இங்கு வர விரும்பம் காட்டவில்லை. அவர் இலங்கைக்காக விளையாட தயார் இல்லை என்று குறிப்பிட்டார்

Photos: Sri Lanka v Macau | Pre-Match Press Conference | 2nd Leg | World Cup Qatar 2022 & Asian Cup 2023 Qualifiers Round 1

ThePapare.com | Waruna Lakmal | 10/06/2019 Editing and re-using……

எவ்வாறாயினும், இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நிசாம் பக்கீர் அலியும் இது பற்றி கருத்து தெரிவித்தார். வெளிநாட்டை தளமாகக் கொண்ட வீரர்களின் ஈடுபாடு பற்றி அவர் அவதானம் செலுத்தியுள்ளார்.   

ஹமில்டன் தனது கடவுச்சிட்டு விவகாரத்திற்காக வந்தார். வந்து பயிற்சி அமர்வில் பங்கேற்று பயிற்சி பெற முடியுமா என்று கேட்டார். இது தான் அவரது அர்ப்பணிப்பு.  

அதேபோன்று, SAFF இற்கு முன்னர் பயிற்சிக்காக வசீம் ராசிக்கும் வந்தார். அணி முகாமையாளருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். தேசிய அணிக்கு விளையாடுவது பற்றி வாய் மூலம் உறுதி அளித்தார். எம்முடன் பல பயிற்சி முகாம்களில் பங்கேற்றார் என்று குறிப்பிட்டார்.  

இலங்கை முன்கள வீரர்களை உருவாக்காதது குறித்து விமர்சனம் வெளியிட்ட பக்கீர் அலி, உள்ளூர் முன்கள வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பது குறித்தும் வலியுறுத்தினார்.   

PSG அணியிலிருந்து வெளியேறுகிறார் அல்வேஸ்

பெரு அணிக்கு எதிரான கோப்பா அமெரிக்கா கிண்ணத்தில் 5-0 என….

இலங்கையில் போதுமான முன்கள வீரர்கள் இல்லை. கடந்த காலத்தில் எமக்கு சிறப்பான முன்கள வீரர்கள் இருந்தார்கள். எம்மிடம் உள்ளூர் முன்கள வீரர்கள் இல்லை. நாம் முன்னணி உள்ளூர் கழக அணிகளை பார்த்தோம் என்றால் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு முன்கள வீரர்களாக உள்ளனர்.  

நாம் அவர்களிடம் தங்கியிருக்கும்போது வீரர்களை எவ்வாறு கட்டியெழுப்புவது? நாம் வெளிநாட்டு வீரர்களில் தங்கி இருப்பதா? உள்ளூர் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதேபோன்று யாராவது இணைய விரும்பினால் நிச்சயம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.   

இது (இலங்கை தேசிய அணி) ஒரு இளம் அணி. எதிர்காலத்திற்காக அணி கட்டி எழுப்பப்படும்போது முழு அணியும் எம்முடன் இருக்க வேண்டும்.   

சம்பியன்ஸ் லீக் குழாம்களின் 18-20 வயதுடைய வீரர்களை அறிமுகம் செய்யும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முடிவு சிறந்ததாகும். அங்கிருந்து நாம் தேசிய குழாத்திற்காக சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.       

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<