இலங்கை அணிக்கு எதிராக அக்லேண்டின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற T20I போட்டியில், நியூசிலாந்து அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒரு போட்டிக்கொண்ட T20I தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு..
நியூசிலாந்து நிர்ணயித்திருந்த 180 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
T20I போட்டிகளை பொருத்தவரை, இரண்டு அணிகளும் கடந்த சில மாதங்களாக சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கவில்லை. முக்கியமாக இலங்கை அணி தங்களுடைய கடந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது. அத்துடன், நியூசிலாந்து அணி இறுதியாக விளையாடிய 10 T20 போட்டிகளில் போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்திருந்தது.
இந்நிலையில், தங்களுடைய தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இவ்வருடத்தின் முதலாவது T20I போட்டியில் இரண்டு அணிகளும் களமிறங்கின. போட்டி நடைபெற்ற ஈடன் பார்க் மைதானத்தில் இரண்டு அணிகளும் ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், குறித்த போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய போட்டிக்கு, இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டதுடன், வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித மற்றும் T20I போட்டிகளில் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக லஹிரு குமாரவையும் இலங்கை களமிறக்கியிருந்தது.
அத்துடன், நியூசிலாந்து அணியை பொருத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் ஸ்கொட் குகலெயின் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறக்கப்பட, மிட்செல் சென்ட்னர் மற்றும் டக் பிரெஸ்வேல் ஆகியோரும் சகலதுறை வீரர்களாக இணைக்கப்பட்டனர்.
>> சொந்த மண்ணில் ஆஸி. அணியை எதிர்கொள்ளவுள்ள இந்தியா
இலங்கைஅணி
நிரோஷன்டிக்வெல்ல, சதீரசமரவிக்ரம, குசல்பெரேரா, குசல்மெண்டிஸ், தனன்ஜயடிசில்வா, திசரபெரேரா, தசுன்சானக, கசுன்ராஜித, லசித்மாலிங்க (தலைவர்), லக்ஷான்சந்தகன், லஹிருகுமார
நியூசிலாந்துஅணி
மார்டின்கப்டில், கொலின்மன்ரோ, ரொஸ்டெய்லர், ஹென்ரிநிக்கோல்ஸ், டிம்செய்பர்ட், மிச்சல்சென்ட்னர், டிம்செளதி (தலைவர்) டக்ப்ரெஸ்வெல், லொக்கிபேர்கஸன், இஷ்சோதி, ஸ்கொட்குகலெயின்
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
ஆரம்பத்தை பொருத்தவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். முக்கியமாக லசித் மாலிங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோரின் ஆரம்பம் மிகச்சிறப்பாக அமைந்தது. இவர்கள் தங்களுடைய முதல் இரண்டு ஓவர்களுக்கு நியூசிலாந்து அணியின் முதல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முக்கியமாக, மார்டின் கப்டில், டிம் செய்பர்ட், ஹென்ரி நிக்கேலாஸ் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதற்கு அடுத்ததாக களமிறங்கிய ரொஸ் டெய்லர் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோர் இணைந்து சற்று ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க, சென்ட்னர் சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியோடு சதம் பெற்ற ரொஸ் டெய்லரின் புதிய சாதனை
நியூசிலாந்து அணி இலங்கை அணியுடனான ஒரு நாள்..
எவ்வாறாயினும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டக் பிரெஸ்வெல் அதிடியாக ஆட, மறுமுனையில் ரொஸ் டெய்லர் மற்றும் அறிமுக வீரர் ஸ்கொட் குகளெயின் ஆகியோர் தங்களுடைய பங்கிற்கு ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். டக் பிரெஸ்வெல் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்ரி அடங்கலாக 44 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, அறிமுக வீரர் குகளெயின் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசிய, கசுன் ராஜித 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சிறப்பாக பந்துவீசிய லசித் மாலிங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், T20I அறிமுகத்தை பெற்ற லஹிரு குமார விக்கெட்டுகளை கைப்பற்றாத போதும், 24 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது. எனினும் துரதிஷ்டவசமாக விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம ஓட்டங்கள் இன்றி ஆட்டமிக்க, குசல் பெரேரா 23 ஓட்டங்களுடனும், நிரோஷன் டிக்வெல்ல 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
>> கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட <<
தொடர்ந்து திசர பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் நான்காவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் 43 ஓட்டங்களை பெற்றிருந்த திசர பெரேரா, லொக்கி பேர்கஸனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திசர பெரேராவின் ஆட்டமிழப்பின் பின்னர் குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களுடன், தனன்ஜய டி சில்வா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் அடிப்படையில், 16.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி, 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லொக்கி பேர்கஸன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என ஒட்டுமொத்த தொடரையும் இழந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளது.
போட்டி சுருக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















