Home Tamil அபார சுழலால் நியூசிலாந்துக்கு சவால் கொடுத்த அகில தனன்ஜய
SLvNZ 1st Test Day 1

அபார சுழலால் நியூசிலாந்துக்கு சவால் கொடுத்த அகில தனன்ஜய

1681

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தேநீர் இடைவேளையின் பின்னர் போட்டியில் மழைக்குறுக்கிட்ட நிலையில், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யத் தொடங்கியதில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கின. இதில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துக்கொண்டது.

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் அஜாஸ் பட்டேல், வில் சமர்வில் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோரை நியூசிலாந்து அணி களமிறக்க, இலங்கை அணி பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் தனன்ஜய டி சில்வாவுடன், முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களான அகில தனன்ஜய மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரை களமிறக்கியது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, சுரங்க லக்மால்

நியூசிலாந்து அணி

டொம் லேத்தம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங், மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், வில் சமர்வில், அஜாஷ் பட்டேல்

புதிய ஜேர்ஸியுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள்…

இந்த மாற்றங்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மதிக்கத்தக்க ஆரம்பத்தை பெற்றது. ஜீட் ராவல் மற்றும் டொம் லேத்தம் ஆகியோருக்கு இடையில் முதல் விக்கெட்டுக்காக 64 ஓட்டங்கள் பகிரப்பட்டது. எவ்வாறாயினும், ஐசிசியின் தடைக்கு பின்னர், முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய அகில தனன்ஜய டொம் லேத்தமின் (30) விக்கெட்டினை கைப்பற்றினார். 

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், அகில தனன்ஜயவின் அதே ஓவரில் ஓட்டங்கள் இன்றி வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார். தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்த அகில தனன்ஜய குறுகிய இடைவேளையில் ஜீட் ராவலின் (33) விக்கெட்டை கைப்பற்ற, நியூசிலாந்து அணி மதியபோசன இடைவேளையின் போது 71 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஆனால், மதியபோசன இடைவேளையின் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இதில், ரொஸ் டெய்லர் தன்னுடைய 31வது டெஸ்ட் அரைச்சதத்தை கடந்தார்.

Photos: Sri Lanka vs New Zealand | 1st Test – Day 1

ThePapare.com | Viraj Kothalawala | 14/08/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

மதியபோசன இடைவேளைக்கு பிறகு டெய்லர் மற்றும் நிக்கோலஸ் ஜோடி 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த போதும், தேநீர் இடைவேளை நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஹென்ரி நிக்கோலஸ் 42 ஓட்டங்களுடன் அகில தனன்ஜயவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து அகில தனன்ஜய தன்னுடைய அடுத்த ஓவரில் பிஜே வெட்லிங்கின் விக்கெட்டினை கைப்பற்ற நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது 179 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் அகில தனன்ஜய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 4வது 5 விக்கெட் பிரதியை பதிவு செய்தார்.

பின்னர், ஆரம்பித்த இந்தப் போட்டியில் மிக விரைவாக ஓட்டங்களை நியூசிலாந்து அணி குவித்து 200 ஓட்டங்களை கடந்த போதும் போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஆட்டநேர முடிவில் ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இலங்கை அணி சார்பாக அகில தனன்ஜய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டி சுருக்கம்

Result

Sri Lanka
267/10 (93.2) & 268/4 (86.1)
New Zealand
249/10 (83.2) & 285/10 (106)
BatsmenRB4s6sSR
Jeet Raval c Dhananjaya de Silva b Akila Dananjaya33833039.76
Tom Latham c Niroshan Dickwella b Akila Dananjaya30883034.09
Kane Williamson c Dimuth Karunaratne b Akila Dananjaya03000.00
Ross Taylor c Niroshan Dickwella b Suranga Lakmal861326065.15
Henry Nicholls lbw b Akila Dananjaya42782053.85
BJ Watling lbw b Akila Dananjaya150020.00
Mitchell Santner lbw b Suranga Lakmal13421030.95
Tim Southee run out (Dhananjaya de Silva)14190173.68
William Somerville not out9281032.14
Trent Boult c Kusal Perera b Suranga Lakmal18221181.82
Ajaz Patel lbw b Suranga Lakmal00000.00
Extras3 (b 0 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total249/10 (83.2 Overs, RR: 2.99)
Fall of Wickets 1-64 (26.3) Tom Latham, 2-64 (26.6) Kane Williamson, 3-71 (30.2) Jeet Raval, 4-171 (58.2) Henry Nicholls, 5-179 (60.2) BJ Watling, 6-205 (69.1) Ross Taylor, 7-216 (73.5) Mitchell Santner, 8-222 (74.6) Tim Southee, 9-249 (83.1) Trent Boult, 10-249 (83.2) Ajaz Patel,
BowlingOMRWEcon
Suranga Lakmal15.252941.91
Lahiru Kumara1013703.70
Akila Dananjaya3038052.67
Dhananjaya de Silva602003.33
Lasith Embuldeniya2218103.68
BatsmenRB4s6sSR
Lahiru Thirimanne st BJ Watling b Ajaz Patel10361027.78
Dimuth Karunaratne lbw b Ajaz Patel39734053.42
Kusal Mendis c Ross Taylor b Ajaz Patel53897159.55
Angelo Mathews c Ross Taylor b Ajaz Patel50987151.02
Kusal Perera c Mitchell Santner b Trent Boult140025.00
Dhananjaya de Silva c & b Ajaz Patel5191026.32
Niroshan Dickwella c Kane Williamson b William Somerville611093055.96
Akila Dananjaya c Ross Taylor b William Somerville08000.00
Suranga Lakmal b Trent Boult40983240.82
Lasith Embuldeniya lbw b William Somerville5171029.41
Lahiru Kumara not out09000.00
Extras3 (b 1 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total267/10 (93.2 Overs, RR: 2.86)
Fall of Wickets 1-27 (10.6) Lahiru Thirimanne, 2-66 (22.5) Dimuth Karunaratne, 3-143 (46.5) Kusal Mendis, 4-144 (47.3) Kusal Perera, 5-155 (52.2) Dhananjaya de Silva, 6-158 (54.1) Angelo Mathews, 7-161 (55.5) Akila Dananjaya, 8-242 (84.4) Suranga Lakmal, 9-262 (91.1) Niroshan Dickwella, 10-267 (93.2) Lasith Embuldeniya,
BowlingOMRWEcon
Trent Boult2044522.25
Tim Southee731702.43
William Somerville22.238333.74
Ajaz Patel3368952.70
Mitchell Santner1103102.82
BatsmenRB4s6sSR
Jeet Raval c Dimuth Karunaratne b Dhananjaya de Silva4200020.00
Tom Latham c Lahiru Thirimanne b Akila Dananjaya45812155.56
Kane Williamson c Kusal Perera b Lasith Embuldeniya4250016.00
Ross Taylor c Dhananjaya de Silva b Lasith Embuldeniya350060.00
Henry Nicholls c Kusal Mendis b Dhananjaya de Silva26712036.62
BJ Watling c Niroshan Dickwella b Lahiru Kumara771736044.51
Mitchell Santner c Suranga Lakmal b Lasith Embuldeniya12350034.29
Tim Southee st Niroshan Dickwella b Lasith Embuldeniya23621037.10
William Somerville not out401182033.90
Trent Boult c Dhananjaya de Silva b Lahiru Kumara262521104.00
Ajaz Patel lbw b Dhananjaya de Silva14231060.87
Extras11 (b 4 , lb 5 , nb 2, w 0, pen 0)
Total285/10 (106 Overs, RR: 2.69)
Fall of Wickets 1-8 (7.4) Jeet Raval, 2-20 (14.4) Kane Williamson, 3-25 (16.3) Ross Taylor, 4-81 (27.5) Tom Latham, 5-98 (39.2) Henry Nicholls, 6-124 (49.3) Mitchell Santner, 7-178 (69.5) Tim Southee, 8-224 (90.3) BJ Watling, 9-260 (98.2) Trent Boult, 10-285 (105.6) Ajaz Patel,
BowlingOMRWEcon
Suranga Lakmal1523702.47
Akila Dananjaya3248412.62
Dhananjaya de Silva1232532.08
Lasith Embuldeniya3749942.68
Lahiru Kumara1003123.10


BatsmenRB4s6sSR
Dimuth Karunaratne c BJ Watling b Tim Southee1222436150.21
Lahiru Thirimanne lbw b William Somerville641634039.26
Kusal Mendis c Jeet Raval b Ajaz Patel10611166.67
Angelo Mathews not out28732038.36
Kusal Perera c Mitchell Santner b Trent Boult231950121.05
Dhananjaya de Silva not out141330107.69
Extras7 (b 6 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total268/4 (86.1 Overs, RR: 3.11)
Fall of Wickets 1-161 (60.2) Lahiru Thirimanne, 2-174 (61.5) Kusal Mendis, 3-218 (76.1) Dimuth Karunaratne, 4-250 (82.2) Kusal Perera,
BowlingOMRWEcon
Trent Boult9.113413.74
Tim Southee1223312.75
William Somerville3167312.35
Ajaz Patel1807414.11
Mitchell Santner1323802.92
Kane Williamson30903.00

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<