இம்ரான் கானின் அதிரடி பந்துவீச்சால் CDB அணி போராடி வெற்றி

280

இம்ரான் கானின் அதிரடி பந்துவீச்சு மூலம் கான்ரிச் பினான்ஸ் அணிக்கு எதிரான பெயார் அண்ட் லவ்லி அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிடிசன் டெவலொப்மண்ட் பிஸ்னஸ் (CDB) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றியீட்டியது.

மொரட்டுவை டி சொய்ஸா அரங்கில் இன்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கான்ரிச் பினான்ஸ் அணி சார்பில் ரவீன் சாயர் அபாரமாக துடுப்பெடுத்தாடினார். எனினும் மறுமுனை துடுப்பாட்ட வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஹர்ஷ ராஜபக்ஷவின் அபார சதத்தின் மூலம் சிங்கர் ஸ்ரீலங்கா வெற்றி

பெயார் அண்ட் லவ்லி (Fair & Lovely)….

இதனால் கான்ரிச் பினான்ஸ் அணி 36 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் ரவீன் சாயர் மாத்திரம் 102 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.     

CDB அணி சார்பில் அதிரடியாக பந்து வீசிய இம்ரான் கான் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய CDB அணியும் விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் ஹஷான் வனசேகர பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்மூலம் CDB அணி 48 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 138 ஓட்டங்களை எட்டியது.

இதன்போது வனசேகர ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றார்.     

போட்டியில் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 137 (36) – ரவீன் சாயர் 102, இம்ரான் கான் 5/40, சமோத் பியுமால் 2/12

சிடிசன் டெவலொப்மன்ட் பிஸ்னஸ் – 138/9 (48) – ஹஷான் வனசேகர 66*, ரவீன் சாயர் 3/32

முடிவு – CDB அணி 1 விக்கெட்டால் வெற்றி

>>காணொளிகளைப் பார்வையிட<<