இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க

454

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ThePapare.com இற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.  

34 வயதாகும் மாலிங்க தனது 19 மாதகால உபாதையின் பின்னர் இலங்கை ஒரு நாள் அணிக்குழாத்தில் இணைந்த போதிலும் தனது வழமையான ஆட்டத்தினை காட்டத் தவறியிருந்தார். தனது மீள்வருகைக்குப் பின்னர் அவர் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தார்.

அதோடு, மாலிங்க கடந்த சில மாதங்களாக மோசமான களத்தடுப்பினை வெளிப்படுத்தியமைக்காக பல்வேறுபட்ட விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கிரிக்கெட் சரித்திரத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரங்கன ஹேரத்

அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன… குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள் அதிகளவு 5 விக்கெட்டுக்களைப் பதிவு செய்துள்ளோர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக… பாகிஸ்தானுக்கு எதிராக அதிகளவு விக்கெட்டுக்கள் 35 வயதிற்குப் பிறகு அதிகளவு விக்கெட் பெற்றோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை….

ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடனான தொடரில் நான் நன்றாக விளையாடியிருக்கவில்லை. என்னால் இப்போது நான் எந்த நிலையில் இருக்கின்றேன் என்பதையும், எனது உடல் இனி போட்டிகளில் விளையாட எந்தளவு ஒத்துழைக்கும் என்பதையும் பார்க்க முடிகின்றது. நான் எவ்வாறான அனுபவத்தை கொண்டிருந்த போதிலும் எனது அணிக்காக போட்டிகளில் வெற்றியினைப் பெற்றுக் கொடுக்க முடியாவிடில், அணிக்கு எது தேவையோ அதைப் பெற்றுத்தர வேண்டும். நான் இங்கு (அணியில்) இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. “  என மாலிங்க இந்தியஇலங்கை தொடர் நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தற்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி துபாயில் ஆரம்பாகவுள்ளது. எனவே, உபுல் தரங்க தலைமையிலான இலங்கையின் ஒரு நாள் குழாத்தினை இன்னும் சில நாட்களில் அணித்தேர்வாளர்கள் வெளியிடவுள்ளனர்.