பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டேன் – மோர்கன்

97
Image Courtesy - Getty

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன், அவர் இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் எனவும் தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நேற்று (30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸின் சகலதுறை ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் 89 ஓட்டங்களைக் குவித்த ஸ்டோக்ஸ், பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களுடன், களத்தடுப்பில் அபார பிடியெடுப்பு ஒன்றையும் எடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார். அத்துடன், இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், உண்மையில் பென் ஸ்டோக்கஸின் திறமையை கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டேன். எங்களுக்கு இந்த நாளை அவர் உணர வைத்தது மாத்திரமின்றி, அவருடைய அந்த அபார பிடியெடுப்பு முற்றிலும் சிறப்பாக இருந்தது. எனவே அணியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்ற அவரைப் போன்றதொரு போட்டித் தன்மை மிக்க வெற்றி நாயகன் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், எமது பந்துவீச்சாளர்கள் உண்மையில் ஒரு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொள்ளாவிட்டாலும், முதல் இன்னிங்ஸில் இருந்து கற்றுக் கொண்டதை பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் சரியான முறையில் பயன்படுத்தியிருந்தனர் என கூறினார்.

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் 12 ஆவது முறையாக இன்று (30) இங்கிலாந்தில்…

இதேநேரம், இந்தப் போட்டியில் எதிரணி வீரர்களுக்கு ஜொப்ரா ஆச்சர் மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருந்தார். ஏழு ஓவர்ள் பந்துவீசி 27 ஓட்டங்களைக் விட்டுக்கொடுத்த அவர், தென்னாபிரிக்க அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

எனவே இந்தப் போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மற்றுமொரு வீரரான ஜொப்ரா ஆச்சரின் முயற்சிக்கு மோர்கன் பாராட்டுக்களைக் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற மந்தமான ஆடுகளத்தில் ஜொப்ரா ஆச்சர் துல்லியமாகவும், வேகமாகவும் பந்துவீசியிருந்தது பாராட்டத்தக்கது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருவது அற்புதமான விடயம். அதுதான் நாங்கள் எப்போதும் முன்னேற்றம் அடைவதற்கு முயன்ற பகுதியாகும்.அத்துடன், போட்டியை வெற்றி கொள்வதற்கு களத்தடுப்பிலும் நாங்கள் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், இங்கிலாந்து அணி வீரர்கள் வெளிப்படுத்திய இந்த திறமையானது கடந்த இரண்டு வருடங்களாக வெளிப்படுத்திய முயற்சியை காட்டுகிறது என்றும் மோகன் கூறினார்.

Video – Ben Stokes’ one-handed stunner to dismiss Phehlukwayo

Englishman Ben Stokes pulled off an…

இந்த போட்டித் தொடரில் வெற்றியுடன் முன்னோக்கிச் செல்வது மிகவும் மகிழ்ச்சி. அதேபோல, திருப்தியையும், ஆறுதலையும் கொடுத்துள்ளது. நாங்கள் இன்றைய நாளில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தோம், ஆனால் இந்த ஆடுகளம் எமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கவில்லை. நாங்கள் கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளவே முயற்சி செய்தோம். ஆனால் நாங்கள் விளையாடிய விதம், எமது வீரர்களின் அனுபவம் மற்றும் கடந்த 2 வருடங்களாக எமது அணி செய்த முயற்சியின் பிரதிபலன் என்பன இந்தப் போட்டியின் வெற்றியில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து அணி பங்குபற்றவுள்ள 2ஆவது லீக் ஆட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி நொட்டிங்ஹம்மில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை அவ்வணி எதிர்த்தாடவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<