ஆஸ்திரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி

500
@AFP

பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகி வரும் நடப்புச் சம்பியன் ஜெர்மனி தனது பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரியாவிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

ஜெர்மனி கோல் காப்பாளர் மானுவல் நெவர் காயத்தில் இருந்து மீண்டு ஒன்பது மாதங்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய நிலையிலேயே அந்த அணி இந்த தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் நம்பிக்கையோடு உலகக் கிண்ணம் செல்லும் ஆர்ஜன்டீனா

பிஃபா உலகக் கிண்ண போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பயிற்சிப் போட்டியில் ஆடிய ஆர்ஜன்டீனா…

கடந்த செப்டெம்பரில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட பின்னர் ஒரு உத்தியோகபூர்வ போட்டியிலும் ஆடாத நிலையில், தற்பொழுது அணிக்கு திரும்பியுள்ள நெவருக்கு அணித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்ட போட்டியில் ஆஸ்திரிய அணி இரண்டாவது பாதியில் இரட்டை கோல்கள் புகுத்துவதை ஜெர்மன் தரப்பினரால் தடுக்க முடியாமல் போனது.

ஆஸ்திரியாவில் கடந்த சனிக்கிழமை (03) நடைபெற்ற இந்த போட்டியில் ஜெர்மனி தோற்றதன் மூலம் அந்த அணி கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி ஒன்றை பெற தவறியுள்ளது. அந்த அணி 1987-88 பருவத்திற்கு பின்னர் இவ்வாறான பின்னடைவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோன்று கடந்த 32 ஆண்டுகளில் தனது அண்டை நாடான ஆஸ்திரியாவிடம் தோல்வியை சந்திப்பது இது முதல் முறையாகும்.

பல முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்கிய ஜெர்மனி 11 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றது. மெசுத் ஒசில் பந்தை வளைந்து செல்லும் வகையில் உதைத்து கோல் காப்பாளரை தாண்டி கோலாக மாற்றினார்.     

எனினும் 53 ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் மார்டின் ஹின்டரகர் மற்றும் மேலும் 16 நிமிடங்கள் கழித்து மத்தியகள வீரர் அலெசன்ட்ரோ செப் ஆகியோர் கோல்களை பெற்று ஆஸ்திரிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.  

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற நிலையில்…

இம்முறை உலகக் கிண்ணத்தில் F பிரிவில் ஆடும் ஜெர்மனி தனது முதல் போட்டியில் வரும் 17 ஆம் திகதி மெக்சிகோவை எதிர்கொள்ளவுள்ளது. ஆஸ்திரிய அணி ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

இதேவேளை போர்த்துக்கல் அணியுடனான நட்புறவு போட்டியை பெல்ஜியம் அணி கோலின்றி சமநிலையில் முடித்துக் கொண்ட போதும் அதன் பின்கள வீரர் வின்சன்ட் கொம்பனி உபாதைக்கு உள்ளாகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மன்செஸ்டர் யுனைடெட்டைச் சேர்ந்த கொம்பனி, ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு அவர் உலகக் கிண்ணத்தில் ஆடுவது பற்றி அடுத்த 48 மணி நேரத்திலேயே தெரியவரும்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த போட்டியில் போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. சம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற ரியெல் மெட்ரிட்டுக்காக இறுதிப் போட்டியில் ஆடிய பின் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது வியப்படைய…

இந்நிலையில் பெல்ஜியம் அணிக்காக 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரராக பாதிவான ஜான் வெர்டொகன் இரண்டாவது பாதியில் கோல் ஒன்றை புகுத்தும் வாய்ப்பு நூலிழையில் தவறிப்போனது.

உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அணி G குழுவில் வரும் ஜுன் 18 ஆம் திகதி பனாமா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான மற்றொரு பயிற்சிப் போட்டியில் கேரி காஹில் மற்றும் அணித்தலைவர் ஹரி கேன் ஆகியோர் முதல் பாதியில் பெற்ற கோல்கள் மூலம் இங்கிலாந்து அணி நைஜீரியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.

கோணர் திசையில் இருந்து காஹில் தலையால் முட்டி அடித்த கோல் மூலம் இங்கிலாந்து போட்டியின் 7 ஆவது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றதோடு பின்னர் 39 ஆவது நிமிடத்தில் கேன் பெனால்டி எல்லையின் விளிம்பில் இருந்து மற்றொரு கோலை புறுத்தினார். இயவோபி 47 ஆவது நிமிடத்தில் நைஜீரியாவுக்கு ஆறுதல் கோல் ஒன்றை போட்டார்.

இங்கிலாந்து வரும் வியாழக்கிழமை (7) கொஸ்டாரிக்காவுடன் தனது இரண்டாவது நடம்புறவு போட்டியில் ஆடவுள்ளது.

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<