இளவயதில் சதம் விளாசி பெண் வீராங்கனை சாதனை

162

சீனிகம கிரிக்கெட் கழகத்தின் 15 வயது நிரம்பிய விஷ்மி குணரட்ன, இலங்கையின் மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய வீராங்கனையாக சாதனை படைத்திருக்கின்றார்.

>>நிதான துடுப்பாட்டத்துடன் போட்டியை சமப்படுத்திய மே.தீவுகள்

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு-1 ஒன்றினைச் சேர்ந்த மகளிர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் ஒருநாள் தொடரில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (25) நடைபெற்ற போட்டியிலேயே விஷ்மி குணரட்ன இந்த சாதனையினை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது சாதனை துடுப்பாட்டத்தின் போது மொத்தமாக 117 பந்துகளை எதிர்கொண்ட விஷ்மி 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், விஷ்மியின் அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக சிலாபம் மேரியன்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 270 ஓட்டங்களை அடைய முடியாமல் போயிருந்தது. அதன்படி, சீனிகம கிரிக்கெட் கழகம் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 247 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது.

>>ஒருநாள் போட்டிகளில் பாரிய வீழ்ச்சியை கண்டதா இலங்கை?

மிக இளவயதில், இலங்கையின் முன்னணி மகளிர் கிரிக்கெட்டில் தன்னை பிரதிநிதித்துவம் செய்கின்ற வாய்ப்பினை பெற்றிருக்கும் விஷ்மி குணரட்ன, ரத்னாவலி பாலிகா வித்தியாலயத்தின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<