Video – பாகிஸ்தானின் Sehwag ஹைதர் அலியா? England தொடரில் அறிமுகம்..!

89

பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளதுடன், இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அசார் அலி தலைமையில் அறிவிக்கப்பட்டடுள்ள இந்த அணியில் இந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலிக்கு முதல்முறையாக பாகிஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இவரின் துடுப்பாட்டம் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விரேந்திர சேவாக்கை ஒத்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.