Home Tamil இளையோர் ஆசியக் கிண்ணம் இந்தியா வசம்

இளையோர் ஆசியக் கிண்ணம் இந்தியா வசம்

1708
ACC

2021ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய U19 (19 வயதின் கீழ்ப்பட்ட) கிரிக்கெட் அணி, இலங்கை U19 அணியினை டக்வெத் லூயிஸ் முறையில் 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன், 2021ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினையும் சுவீகரித்துக் கொள்கின்றது.

>>பாகிஸ்தானை  வீழ்த்தி U19 ஆசியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை!

இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (31) துபாயில் ஆரம்பமாகியது. இறுதிப் போட்டிக்கு இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை U19 அணியும், பங்களாதேஷை வீழ்த்திய இந்திய U19 அணியும் தெரிவாகின.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை U19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய U19 அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை U19 அணி தமது ஆட்டத்தினை ஆரம்பித்து போட்டியின் 29ஆவது ஓவர் நெருங்கும் போது மழையின் தாக்கம் ஏற்பட ஆட்டம் அணிக்கு 38 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து 38 ஓவர்கள் வரை துடுப்பாடிய இலங்கை U19 அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை U19 அணியின் துடுப்பாட்டம் சார்பில் விக்கி ஒஸ்ட்வால் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, கௌசால் தாம்பே 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

>>டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி கொக்

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக இந்திய U19 அணிக்கு 38 ஓவர்களில் 102 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இந்திய U19 அணி போட்டியின் வெற்றி இலக்கினை 21.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய U19 அணியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த அதன் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான அன்ங்ரிஷ் ராகுவென்ஷி அரைச்சதம் தாண்டியிருந்ததோடு 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், ஷெய்க் ரஷீட்டும் 31 ஓட்டங்களுடன் இந்திய U19 அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இலங்கை U19 அணியின் பந்துவீச்சில் யசிரு ரொட்ரிகோ ஒரு விக்கெட்டினைச் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka U19
106/9 (38)

India U19
104/1 (21.3)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Raj Bawa b Ravi Kumar  2 12 0 0 16.67
Shevon Daniel c Aaradhya Yadav b Raj Bawa 6 28 0 0 21.43
Anjala Bandara lbw b Kaushal Tambe 9 33 1 0 27.27
Sadisha Rajapaksa c Shaik Rasheed  b Vicky Ostwal 14 35 1 0 40.00
Pawan Pathiraja b Kaushal Tambe 4 17 0 0 23.53
Ranuda Somarathne lbw b Vicky Ostwal 7 18 1 0 38.89
Dunith Wellalage c Raj Bawa b Vicky Ostwal 9 15 1 0 60.00
Raveen De Silva run out (Shaik Rasheed ) 15 29 1 0 51.72
Yasiru Rodrigo not out 19 26 2 0 73.08
Matheesha Pathirana c Rajvardhan Hangargekar b Angkrish Raghuvanshi  14 14 1 0 100.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 106/9 (38 Overs, RR: 2.79)
Fall of Wickets 1-4 (3.4) Chamindu Wickramasinghe, 2-15 (10.3) Shevon Daniel, 3-3 (15.3) Anjala Bandara, 4-37 (19.4) Pawan Pathiraja, 5-47 (22.3) Sadisha Rajapaksa, 6-57 (26.1) Dunith Wellalage, 7-57 (26.3) Ranuda Somarathne, 8-82 (34.4) Raveen De Silva, 9-106 (37.6) Matheesha Pathirana,

Bowling O M R W Econ
Rajvardhan Hangargekar 8 1 26 1 3.25
Ravi Kumar  8 1 17 1 2.12
Raj Bawa 7 0 23 1 3.29
Kaushal Tambe 6 0 23 2 3.83
Thakur Tilak Varma 8 3 11 3 1.38
Nishant Sindhu 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Angkrish Raghuvanshi  not out 56 67 7 0 83.58
Harnoor Singh  lbw b Yasiru Rodrigo 5 13 0 0 38.46
Shaik Rasheed  not out 31 49 2 0 63.27


Extras 12 (b 0 , lb 1 , nb 0, w 11, pen 0)
Total 104/1 (21.3 Overs, RR: 4.84)
Fall of Wickets 1-8 (4.1) Harnoor Singh ,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 3 1 12 1 4.00
Treveen Mathews 2 1 2 0 1.00
Dunith Wellalage 6 0 30 0 5.00
Chamindu Wickramasinghe 2 0 11 0 5.50
Matheesha Pathirana 3.3 0 20 0 6.06
Raveen De Silva 2 0 14 0 7.00
Sadisha Rajapaksa 3 0 14 0 4.67



முடிவு – இலங்கை U19 அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<