இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித்தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி நேற்று பிரிட்டோரிய மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணிக்கும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதில் ஜேசன் ஸ்மித் அதிரடியாக ஆடி 112 பந்துகளை எதிர் கொண்டு 134 ஓட்டங்களைக் குவித்தார்.
பெட்ரிக் குருகெர் 47 பந்துகளுக்கு 47...