நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கேரி ஸ்டெட் விலகவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அவரது ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் முடிவடைந்தவுடன் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை இன்று (04) வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேரி ஸ்டெட்டின் 7 ஆண்டுகால பயிற்சியாளர் பதவி நிறைவுக்கு வரவுள்ளது.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன்...