அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

416

நாளை (10) அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் ஆரம்பமாகும் மூன்று நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் போட்டியில் ஆடும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (9) அறிவித்துள்ளது.

மொஹமட் சமாஸின் போராட்டம் வீண்; ஆஸி. இளையோரிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு எதிராக கொழும்பு பி. சரணவமுத்து மைதானத்தில் ….

பாரிய மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இளையோர் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை 19 வயதின் கீழ் அணியினை வழமை போன்று வென்னப்புவ புனித ஜோசப்வாஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் நிப்புன் தனஞ்சய வழிநடாத்த அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடிய ஐந்து வீரர்கள் இந்த இளையோர் டெஸ்ட்  போட்டிக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இளையோர் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட வீரர்கள் குழாத்தில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான, மணிக்கட்டு சூழல் வீரர் ரவீன் டி சில்வா, சகலதுறை வீரர் அவிஷ்க தரிந்து, முன்வரிசை துடுப்பாட்ட வீரர் லக்ஷன் ரொட்ரிகோ மற்றும் பிரவீன் நிமேஷ் ஆகியோர் அமைகின்றனர்.

இதேவேளை இலங்கை 19 வயதின் கீழ் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களின் இடத்தினை சினான் கலிந்து மற்றும் பவான் ரத்நாயக்க ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக நிரப்ப, கண்டி திரித்துவ கல்லூரியின்  வேகப்பந்து வீச்சாளர் ருவின் பீரிஸ், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மணிக்கட்டு சுழல் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் சந்துன்  மெண்டிஸ் ஆகியோருக்கும்  அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடனான இளையோர் டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலகு வெற்றியினை பதிவு செய்த இலங்கை A கிரிக்கெட் அணி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான …..

அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணியுடனான இளையோர் ஒரு நாள் போட்டிகளில் திறமையான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய கமில் மிஷார மற்றும் சோனால் தினுஷ  ஆகியோர் இளையோர் டெஸ்ட் போட்டியில்  இலங்கை 19 வயதின் கீழ் அணியின் துடுப்பாட்டத்துறையினை வலுப்படுத்த  நீடிப்பதோடு ரோஹன் சஞ்சய, திலும் சுதீர மற்றும் மொஹமட்  சமாஸ்  ஆகியோரும் அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கு எதிராக தமது திறமையினை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

நாளை ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான இளையோர் டெஸ்ட் போட்டி, சுழல்பந்துவீச்சிற்கு சாதகமான கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட இளையோர் டெஸ்ட் அணி

நிப்புன் தனஞ்சய (புனித ஜோசப் வாஸ் கல்லூரி), கமில் மிஷார (றோயல்  கல்லூரி), சோனால்  தினுஷ  (மஹாநாம கல்லூரி), அஷான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி), ரோஹான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி), திலும் சுதீர (றிச்மன்ட்  கல்லூரி), விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), சந்துன்  மெண்டிஸ் (றிச்மன்ட்  கல்லூரி), சமிந்து விஜேசிங்க (நாலந்த கல்லூரி), ருவின் பீரிஸ் (திரித்துவ கல்லூரி), சிஹான்  கழிந்து (புனித செர்வதியஸ் கல்லூரி), மொஹமட் சமாஸ்  (ஸாஹிரா கல்லூரி), பவன் ரத்நாயக்க (மஹாநாம கல்லூரி)

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<