இளையோர் ஆசியக்கிண்ண குழாத்தில் மாதுலன், ஆகாஸ்!

ACC U19 Asia Cup 2025

7

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட குழாத்தில் தமிழ்பேசும் வீரர்களான சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஆஷஸ் தொடரில் இருந்து வெளியேறும் ஜோஸ் ஹேசல்வூட்

குகதாஸ் மாதுலன் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பதுடன், விக்னேஷ்வரன் ஆகாஸ் யாழ். ஹார்ட்லி கல்லூரியில் கற்றதுடன், தற்போது கொழும்பு சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார். 

இவர்களுடன் இலங்கை இளையோர் அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரியிள் விமத் டின்ஷார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் கவீஜ கமகே நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை இளையோர் அணியானது தங்களுடைய முதல் சுற்றுப் போட்டிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை முறையே இம்மாதம் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் எதிர்கொள்ளவுள்ளது. 

இளையோர் ஆசியக்கிண்ணத் தொடர் நாளை (10) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம் 

விமத் டின்ஷார (தலைவர்), கவீஜ கமகே (உப தலைவர்), டிமந்த மஹாவிதான, விரான் சமுதித்த, துல்னித் சிகேரா, சாமிக ஹீனடிகல, ஆதாம் ஹில்மி, சாமரிந்து நெத்சாரா, கித்ம விதானபதிரண, செத்மிக செசவிரத்ன, சனுஜ நிந்துவர, குகதாஸ் மாதுலன், ரசித் நிம்சார, விக்னேஷ்வரன் ஆகாஸ், தருஷ நவோத்ய 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<