சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புதிய தரவரிசையின்படி ஐந்தாவது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியை பின்னடையச் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
>>கமில் மிஷார, பானுக்க அதிரடியில் கீரின்ஸ் அணிக்கு வெற்றி<<
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
குறித்த இந்தப் போட்டியை தொடர்ந்து 102 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தையும், இலங்கை அணி 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்துக்கொண்டன.
அதேநேரம் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணியை பின்தள்ளி ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணி சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பு மற்றும் சரித் அசலங்கவின் தலைமைத்துவத்தின்போது ஒருநாள் தரவரிசையில் ஒன்பதாவது இடத்திலிருந்த நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<