ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ணம் 2025; வெல்லாலகே தலைமையில் இலங்கை

141
Dunith

வளர்ந்து வருகின்ற மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் ரைசிங் ஸ்டார்ஸ் 2025 ஆசிய கிண்ணத் T20 தொடருக்கான (Asia Cup Rising Stars T20 – 2025) இலங்கை ‘A’ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>ரைசிங் ஸ்டார்ஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<

அதன்படி பந்துவீச்சு சகலதுறைவீரரான துனித் வெல்லாலகே, இலங்கை A குழாத்தினை இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

அதேநேரம் கட்டாரில் நவம்பர் 14 முதல் நவம்பர் 23 வரை நடைபெறவுள்ள இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம், உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ஜொலித்து வருகின்ற வீரர்கள் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மொத்தம் 8 இளம் அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் குழு A நிரல்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை A அணியுடன் குழு A இல் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றின் A அணிகளுடன் இணைந்து ஹொங்கொங் சீனா அணியும் காணப்படுகின்றது.

அதேவேளை இலங்கை A அணியானது, நவம்பர் 15ஆம் திகதி தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் A அணியினை எதிர்கொள்கின்றமை சுட்டிக்காட்டதக்கது.

இலங்கை A குழாம்:

துனித் வெல்லாலகே (தலைவர்), விஷேன் ஹாலம்பகே, நிஷான் மதுஷ்க, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, அஹன் விக்ரமசிங்க, சோஹான் டி லிவேரா, ரமேஷ் மெண்டிஸ், ட்ரெவின் மெதிவ்ஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், ப்ரமோத் மதுஷன், மிலான் ரத்நாயக்க, இஷித விஜயசுந்தர, காருக்க சங்கேத்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<