IPL போட்டிகளில் ஓய்வினை அறிவித்த ரவி அஸ்வின்

249

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், IPL போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இலங்கை தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வை அறிவித்த அஸ்வின், தொடர்ந்து IPL மற்றும் TNPL உட்பட்ட T20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே அஸ்வினின் புதிய ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனது ஓய்வு அறிவிப்பினை X சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டுள்ள அஸ்வின், உலகின் ஏனைய T20 லீக் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

38 வயது நிரம்பிய அஸ்வின் இறுதியாக நடைபெற்ற IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூலம் இந்திய நாணயப்படி 9.75 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 33.61 கோடி ரூபாய்கள்) கொள்வனவு செய்யப்பட்டதோடு, இதுவரை மொத்தமாக 221 IPL போட்டிகளில் பல்வேறு அணிகளுக்காக மொத்தம் 187 விக்கெட்டுக்களைச் சாய்த்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<