ஷமாஸ், பபசரவின் நிதான ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த மோர்ஸ் அணி

67

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் ஐந்து போட்டிகள் இன்று (08) நிறைவடைந்தன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர்  மோர்ஸ் விளையாட்டுக் கிழகம்

பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோர்ஸ் விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்தபோதும் இராணுவப்படை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. 

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு மேலும் 139 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இறுதி நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மோர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் அணித்தலைவர் பபசர வாத்துகே (62) மற்றும் மொஹமட் ஷமாஸ் (62) சிறப்பாக ஆடினர். 

இதன்மூலம் அந்த அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்றது. எனினும் இராணுவப்படை அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 ஓட்ட வேற்றி இலக்கை அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 374 (96.3) – லக்ஷான் எதிரிசிங்க 86, தினேஷ் சந்திமால் 84, அஷான் ரன்திக்க 77, துஷான் விமுக்தி 61, தனுஷ்க ரணசிங்க 8/76

மோர்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (43.1) – நிபுன் கருனானாயக்க 31, யசோத மெண்டிஸ் 7/18

மோர்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/0 – 275 (67.1) – பபசர வதுகே 62, மொஹமட் ஷமாஸ் 62, அசேல குணதிலக்க 6/63, யசோத மெண்டிஸ் 3/42

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 30/2 (6.5) – அஷான் ரன்திக்க 23, தனுஷ்க ரணசிங்க 2/21

முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


லங்கா கிரிக்கெட் கழகம் எதிர் ராகம் கிரிக்கெட் கழகம்

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை பெற்ற ராகம கிரிக்கெட் கழகம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. 

இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு 212 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து லங்கா கிரிக்கெட் கழகம் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓட்ட வெற்றி இலக்கை ராகம அணி விக்கெட் இழப்பின்றி 2.4 ஓவர்களில் எட்டியது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (77) – பிரிமோஷ் பெரேரா 57, கேஷான் விஜேரத்ன 51, ஷஷிக்க டுல்ஷான் 5/26, அமில அபொன்சோ 2/42

ராகம கிரிக்கெட் கழகம் – 417/6d (99) – ரொஷேன் சில்வா 165, நிஷான் மதுசங்க 154, உதித் மதுஷான் 3/103 

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 198 (68.3) – சானக்க ருவன்சிறி 43, கசுன் அபேரத்ன 35, நிஷான் பீரிஸ் 3/47, அமில அபோன்சோ 3/51, நசார் உஸைன் 2/26

ராகம் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 16/0 (2.4)

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி


செரசன்ஸ் விளையாட்டுக கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு வளாகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 176 (83) – சாலிய ஜீவன்த 35, நிமேஷ் விமுக்தி 4/39, சதுரங்க குமார 3/25

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 281 (70.5) – ஓஷத பெர்னாண்டோ 69, சுமித் காடிகோன்கர் 60, கசுன் விதுர 49*, மொஹமட் டில்ஷாட் 4/63, சாமிக்க எதிரிசிங்க 3/105

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 123 (37.3) – ஹர்ஷ ராஜபக்ஷ 25, சதுரங்க குமார 4/52, 

சிலாபம் மேரியன்ஸ் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 19/0 (6.4)

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 10 விக்கெட்டுகளால் வெற்றி


BRC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 328 (105.4) – சானுக்க விதானவசம் 68, லசித் லக்ஷான் 59, லிசுல லக்ஷான் 49, உபுல் இந்திரசிறி 7/120

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 279 (56.1) – அஞ்செலோ ஜயசிங்க 109, மாதவ வர்ணபுர 55, சாத் நசிம் 51, லசித் லக்ஷான் 4/21, மொஹமட் சிராஸ் 3/68, கெவின் கொத்திகொட 2/25

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 289 (64.2) – லசித் லக்ஷான் 133, கெவின் கொத்திகொட 30, லக்ஷித்த ரசன்ஜன 8/57

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 171/3 (39) – பசிந்து லக்ஷான் 52, அஷேன் சில்வா 25

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் CCC

இடம் – கொழும்பு, CCC மைதானம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 205 (53.2) – சந்தோஷ் குணதிலக்க 67, விஷாட் டி சில்வா 46, சொனால் தினுஷ 6/55, விஷ்வ பெர்னாண்டோ 3/40

CCC (முதல் இன்னிங்ஸ்) – 244 (59.2) – மினோத் பானுக்க 99, லசித் அபேரத்ன 38, டில்ருவன் பெரேரா 5/95, பிரபாத் ஜயசூரிய 4/76

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 239 (65.4) – விஷ்வ ரன்திக்க 73, சன்துஷ் குணதிலக்க 44, சொனால் தனுஷ 5/100, விஷ்வ பெர்னாண்டோ 3/37

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203/7 (58.1) – லசித் அபேரத்ன 44, ரொன் சந்திரகுப்தா 35, டில்ருவன் பெரேரா 4/80, நிபுன் ரன்சிக்க 3/34  

முடிவு – CCC 3 விக்கெட்டுகளால் வெற்றி