2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
>>WATCH – இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து | SLvENG<<
அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் கடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய அணியிலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம், சகலதுறை வீரர் சதாப் கான் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் மீண்டும் உலகக் கிண்ண அணிக்குத் திரும்பியுள்ளனர்.
கடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய சல்மான் அலி அகாவே உலகக் கிண்ணத் தொடரிலும் தலைவராக தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம் ஜூனியர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஹூசைன் தலாத், குஷ்தில் ஷா, மொஹமட் ஹாரிஸ் மற்றும் சுபியான் முகீம் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. அத்துடன் மொஹமட் ரிஸ்வானுக்கும் இந்த முறை உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்படாது போயிருக்கின்றார்.
>>டயலொக் தலைமையத்தை வந்தடைந்த ICC T20 உலகக்கிண்ணம்<<
T20 உலகக் கிண்ண அணி அறிவிக்கப்பட்டாலும், உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது அந்நாட்டு அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று தலைமைப் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேட் தெரிவித்துள்ளார். “எங்கள் வேலை அணியைத் தேர்வு செய்வது மட்டுமே. அரசின் முடிவிற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் பெப்ரவரி 7ஆம் திகதி கொழும்பில் வைத்து நெதர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது.
பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண குழாம்
சல்மான் அலி அகா (தலைவர்), அப்றார் அஹமட், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகார் சமான், கவாஜா மொஹமட் நபாய் (விக்கெட்காப்பாளர்), மொஹமட் நவாஸ், மொஹமட் சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்ஸாதா பர்ஹான், சயீம் அயூப், ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















