உபாதை காரணமாக வெளியேறும் வேகப்பந்துவீச்சாளர்

New Zealand tour of Zimbabwe 2025

129
Will O'Rourke

சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் வில் ஓ ரோர்க் நீக்கப்பட்டுள்ளார்.

வில் ஓ ரோர்க்கிற்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

>>அறிமுக வீரரினை இரண்டாவது டெஸ்டில் களமிறக்கும் நியூசிலாந்து<<

அணியிலிருந்து ஏற்கனவே நேதன் ஸ்மித் உபாதை காரணமாக வெளியேறியிருந்த நிலையில், அவருக்கு பதிலாக ஷக்காரி போல்க்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வில் ஓ ரோர்க் உபாதை காரணமாக வெளியேறியுள்ளதுடன், அவருக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளராக பென் லிஸ்டர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

வில் ஓ ரோர்க் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத ஜேக்கப் டப்பி அல்லது மெதிவ் பிஷர் ஆகியோரில் ஒருவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (7) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<